நம்மை வியக்க வைப்பதில் விஞ்ஞான உலகம் எப்போதும் தயங்கியதில்லை. புதிய, புதிய கண்டுபிடிப்புகளால் தினம், தினம் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகிறோம். நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத வேலைகளை செயற்கை நுண்ணறிவு செய்து வருகிறது. நேற்று முன்தினம்தான், சந்திரயான் விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இந்தியா சாதனை படைத்திருந்தது.


ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாசா:


இந்த நிலையில், அடுத்த ஆச்சரியத்தை அளித்து மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் பயணிக்கும் விமானத்தை வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதா என நாசா ஆய்வு செய்து வருகிறது. 


இதுதொடர்பாக நாசா வெளியிட்ட அறிக்கையில், ஒலியை விட சற்று குறைவான வேகத்தில் பயணிக்கும் சோதனை ஜெட்டின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தில் ஒரு பொருள் பயணித்தால் அதை மேக் 1 என அளவீடுவோம். அதை விட குறைவான வேகத்தில் பயணிக்கும் பட்சத்தில் மேக் 2 மற்றும் மேக் 4 (மணிக்கு 2,470 முதல் 4,900 கி.மீ வேகம்) என வேகத்தை அளவீடுவோம்.


தற்போது, மேக் 2 மற்றும் மேக் 4 வேகத்தில் பயணிக்கும் ஜெட் குறித்த தகவல்களைதான் நாசா வெளியிட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பெரிய விமானங்களின் வேகத்தை காட்டிலும் 5 மடங்கு அதிக வேகத்தில் விமானங்களை இயக்க நாசா திட்டமிட்டு வருகிறது. அதாவது, மணிக்கு 600 மைல் வேகத்தில் விமானம் இயக்கப்படும். அதாவது, ஒலியின் வேகத்தில் சுமார் 80 சதவீத வேகத்தில் விமானம் இயக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.


நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 1.5 மணி நேரத்தில் பயணம்:


இந்த விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், நியூயார்க் முதல் லண்டன் (3,459 மைல்கள் அல்லது 5,566 கிமீ தூரம்) போன்ற நீண்ட தூரத்தை 1.5 மணி நேரத்தில் சென்றடையலாம். அதேபோல, இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு 1.5 மணி நேரத்தில் சென்றடையலாம்.


விண்வெளி பயணங்கள், வானியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் space.com இணையதளம், நாசாவின் அதிவேக விமானம் குறித்து குறிப்பிடுகையில், "QuessT (Quiet SuperSonic Technology) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் X-59 விமானம் வடிவமைக்கப்படும். ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் விமானம் இயக்கப்படும்போது உரத்த சத்தம் கேட்கும். இந்த சத்தத்தை குறைக்கவே QuessT தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்த உள்ளது.


இந்த அதிவேக விமானத்தை நிறுத்தக்கூடிய சாத்தியமான வழிகளை நாசா ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்காவில் சூப்பர்சோனிக் விமானங்களை இயக்க தடை இருப்பதால், வடக்கு அட்லாண்டிக், பசிபிக் போன்ற கடல் கடந்த பாதைகளில் இயக்க நாசா திட்டமிட்டு வருகிறது.


இதுகுறித்து நாசாவின் சூப்பர்சோனிக் தொழில்நுட்பத் திட்டத்தின் திட்ட மேலாளர் லோரி ஓசோரோஸ்கி கூறுகையில், "10 ஆண்டுகளுக்கு முன்பு மேக் 1.6-1.8 வேகத்தில் இதே போன்ற ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டோம். இந்த ஆய்வே, X-59 விமானத்தை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவி புரிந்துள்ளது" என்றார்.