அரசியல் தாண்டி தன்னைப் பற்றிய சுயபகடி பதிவுகள், நகைச்சுவைப் பதிவுகள் என ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா.
பாஜவைச் சேர்ந்தவரான டெம்ஜென் இம்னா நாகாலாந்து மாநில உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
நாகா மக்கள் என அழைக்கப்படும் நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு உரித்தான பிரத்யேக முக அமைப்புடனும், குறும்பான பேச்சுகளுடனும் வலம் வரும் இவர் மீடியாக்களின் வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் முன்னதாக தன் கண்கள் பற்றி இவர் பகிர்ந்துள்ள சுய பகடி பதிவு ட்விட்டரில் லைக்குகளையும் ரீட்வீட்டுகளையும் வாரிக் குவித்து வருகிறது.
என்னுடைய கண்கள் வேண்டுமானால் சிறியவையாக இருக்கலாம் ஆனால், கேமரா ஒரு மைல் தூரத்தில் இருந்தாலும் என்னால் பார்க்க முடியும். எப்போதும் போஸூடன் ரெடி” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், நீங்கள் இந்தப் பதிவை படித்துக் கொண்டே சிரிப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது” என்றும் நெட்டிசன்களுடன் உரையாடும் வகையில் டெம்ஜென் இம்னா குறும்பாகப் பதிவிட்டுள்ளார்.
இன்று காலை இவர் பகிர்ந்த இந்தப் பதிவு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், 3200க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் குவித்து ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இவர் தான் சிங்கிளாக இருப்பது குறித்து பகிர்ந்த பதிவும் ட்விட்டரில் வைரலானது. “நீங்கள் க்யூட்டாகவும் சிங்கிளாகவும் இருந்தால் நிழற்பட கலைஞர்கள் எப்போதும் உங்களை சுற்று கொண்டே இருப்பார்கள். நான் ஒரு செலிபிரேட்டியை போல் தற்போது உணர்கிறேன்” என இவர் பகிர்ந்த பதிவு ட்விட்டரில் படுவேகமாக வைரலானது.
அதே போல் கடந்த ஜூலை மாதம் உலக மக்கள் தொகை தினம் தொடர்பாக இவர் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில், “இந்த உலக மக்கள் தொகை தினத்தில் இந்திய இளைஞர்கள் அனைவரும் குழந்தைப்பேறு மற்றும் மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால் என்னை போல் சிங்கிளாக இருந்து வலமான சமூதாயம் உருவாக உதவியாக இருங்கள். வாருங்கள் சிங்கிள் இயக்கத்தில் இணைய வாருங்கள்” எனக் குறும்பாகப் பதிவிட்டு நெட்டிசன்களின் லைக்குகளை அள்ளினார்.