நாகாலாந்து பாஜகவைச் சேர்ந்த கல்வி அமைச்சர் டெம்ஜேன் இம்னா அலாங் அடிக்கடி ட்விட்டர் தளத்தில் தன்னுடைய பதிவுகள் மூலம் பிரபலம் அடைவது வழக்கம். அந்தவகையில் தற்போது அவர் மீண்டும் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் சிங்கிள் தொடர்பாக ஒரு பதிவை செய்துள்ளார். 


 


அதன்படி அந்தப் பதிவில், “நீங்கள் க்யூட்டாகவும் சிங்கிளாகவும் இருந்தால்  நிழற்பட கலைஞர்கள் எப்போதும் உங்களை சுற்று கொண்டே இருப்பார்கள். நான் ஒரு செலிபிரேட்டியை போல் தற்போது உணர்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு ட்விட்டர் தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. எப்போதும் சிங்கிள்களுக்கு ஆதராவாக இவருடைய பதிவுகள் இருப்பதால் இவருடைய பதிவுகள் ட்விட்டர் தளத்தில் பெரும் வரவேற்பை பெறுவது வழக்கம். 


 






கடந்த ஜூலை மாதம் உலக மக்கள் தொகை தினம் தொடர்பாக இவர் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், “இந்த உலக மக்கள் தொகை தினத்தில் இந்திய இளைஞர்கள் அனைவரும் குழந்தைப்பேறு மற்றும் மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் என்னை போல் சிங்கிளாக இருந்து வலமான சமூதாயம் உருவாக உதவியாக இருங்கள். வாருங்கள் சிங்கிள் இயக்கத்தில் இணைய வாருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார். 


 






அவரின் இந்த சிங்கிள் பதிவு பலரையும் கவர்ந்து வந்தது.. பலரும் இதற்கு பதில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவும் இதற்கு ஒரு பதில் பதிவை செய்துள்ளார். அதில், “நாகலாந்து கல்வி அமைச்சர் திருமணத்திற்கு எதிரானவர் அல்ல. அவர் தன்னுடைய சிங்கிள் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க மும்முரமாக உள்ளார்” எனப் பதிவிட்டிருந்தார்.


அந்தப் பதிவு அப்போது வைரலானது. அதைத் தொடர்ந்து தற்போது அவரின் இந்தப் பதிவும் வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


 






 






 


இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.