சுதந்திர இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் தபால் தலையின் புகைப்படம் இந்திய அரசின் MyGovIndia தளத்தில் பகிரப்பட்டுள்ளது.


75ஆவது சுதந்திர தின விழா கடந்த ஓராண்டாக, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திர இந்தியா, இந்தியாவின் தேசியக் கொடி, சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்த தகவல்களை நினைவுகோறும் வகையில் பல தகவல்கள் MyGovIndiaஅரசு தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.






அந்த வகையில் முன்னதாக சுதந்திர இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் தபால் தலையின் புகைப்படம் இந்திய அரசின் MyGovIndia தளத்தில் பகிரப்பட்டுள்ளது.


 






மேலும் இந்தத் தபால் தலை 1947ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பகிரப்பட்டதாகவும், 3 அரை அணாவுக்கு இந்தத் தபால் தலை விற்கப்பட்டதாகவும் சுவாரஸ்யத் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. 


இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், சுதந்திர தின இந்தியா, இந்தியாவின் தேசியக் கொடி, சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்த தகவல்கள் கடந்த ஓராண்டாக நினைவுகோறும் வகையில் பல தகவல்கள் MyGovIndia அரசு தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.