டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால் கைது செய்யப்பட்டார். பின்னர், இது புரளி என தெரியவந்தது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.






வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் 6E-2126இல் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் போலீசார் விமானத்தை சோதனை செய்து விமானம் பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்தனர். அந்த நபரின் பையை சோதனையிட்டதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.


 






வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ஒன்றும் புதிதல்ல. குறிப்பாக, மக்கள் கூடும் பொது இடங்களிலும், பிரபலங்களின் வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுப்பது பல காலமாகவே நடந்து வருகிறது. ஆனால், விமானத்தில் பயணி ஒருவரே பொய் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த பயணி பொய்யான மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண