மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது புனே. புனே நகரில் அமைந்துள்ளது ஹடாப்சர். இங்கு மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த சூழலில், நேற்று இரவு மேம்பாலத்தில் இருந்து வேன் ஒன்று திடீரென பின்பக்கமாக வேகமாக கீழ் நோக்கி வேகமாக சென்றுள்ளது.
ஓட்டுநரே இல்லாமல் சென்ற வேன்:
அப்போது, அந்த சாலைக்கு எதிர்திசையில் உள்ள சாலையில் சென்ற வாகனத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இதை படம்பிடித்துள்ளனர். அப்போதுதான், அந்த வேனில் ஓட்டுநரே இல்லாதது தெரிய வந்துள்ளது.
சுமார் 50 மீட்டருக்கு அதிகமாக ஓட்டுநரே இல்லாமல் பின்னோக்கிச் சென்ற இந்த சரக்கு வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி நின்றது. இந்த சம்பவத்தை அருகில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓட்டுனரே இல்லாமல் பின்னோக்கிச் சென்ற இந்த வேன் புனே மாநகராட்சிக்குச் சொந்தமானது ஆகும். இபந்த விபத்திற்கு என்ன காரணம்? இந்த வேனின் ஓட்டுனர் எங்கு சென்றார்? இந்த சம்பவம் எப்படி அரங்கேறியது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய இந்த வேன் புனே மாநகராட்சியின் சாலை பராமரிப்பில் ஈடுபடும் வேன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: PM Modi Vinesh Phogat: நீங்கள் இந்தியாவின் பெருமை வினேஷ்! - பதக்கத்தை இழந்ததும் முதல் ஆளாய் ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி!
மேலும் படிக்க: Vinesh Phogat: பேரிடி! போட்டியிடாமலே பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி