மும்பையில் ஒரு பாட்டில் விஸ்கி ஆர்டர் செய்த பெண்மணியின் வங்கி கணக்கில் இருந்து லட்ச கணக்கில் பணம் டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறது. அதுவும் அவருடைய கிரெடிட்க் கார்டின் டிமிட் முழுவதையும் கொள்ளையடித்திருக்கிறது மோசடி கும்பல். இதுகுறித்து மும்பை நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 


இந்த வழக்கு தொடர்பாக அப்பெண் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் கூறுகையில், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில், தனது நண்பரின் பிறந்தநாள் விழாவின் அலங்காரத்திற்காக ஒரு விஸ்கி பாட்டில் தேவையென, திடீரென்று நினைவுக்கு வந்திருக்கிறது. சரி, ஆன்லைனில் ஆர்டர் செய்வோம் என்று முடிவெடுத்தவர், தேடியதில் தஹிசரில் உள்ள சில்வர் ஒயின்ஷாப் என்ற கடையில் ஆர்டர் செய்தார். 


கடை விற்பனையாளருடன் போனில் பேசியுள்ளார் அந்த பெண். ஒயின் ஷாப்பில் வேலை செய்வதாக கூறி பேசியவர்,  கடை மூடப்பட்டிருந்தாலும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்துவிடலாம் என்றும், நீங்கள் QR கோடு மூலம் பணம் அனுப்பினால் போதும் என்றும் கூறியிருக்கிறார்.  அதன்படி அந்தப் பெண் ரூ.550 செலுத்தியிருக்கிறார். டெலிவரி செய்பவர் உங்களை தொடர்பு கொள்வார் என்று அவரிடம் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார் அந்த நபர். 


அதன்படி,  ஒருவரிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு அழைப்பு வந்தது. மதுபானத்தை வீட்டிற்கு டெலிவரி செய்ய  பதிவு செய்வது கட்டாயம் என்றும், அதற்கு அவர்களின் நிர்வாகி ஒருவர் உதவுவார் என்றும் அந்த நபர்  கூறியுள்ளார். அந்த பெண்ணிற்கு வந்த அழைப்பில் மொபைல் பேமெண்ட் சேவையான கூகுள் பேயில்  ரசீது எண்ணை 19,051 என்று பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் அவ்வாறு செய்துள்ளார். ஆனால், ரூ.19,501 அவர் வங்கி கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கடை நிர்வாகியை தொடர்பு கொண்டுள்ளார்.


அந்த பெண் நிர்வாகியிடம் இதைப் பற்றி கூறினார். அதற்கு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி ஏற்பட்டுவிட்டதாகவும், சிறுது நேரத்தில் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால், இழந்த பணத்தை திரும்பப் பெற முழு செயல்முறையையும் மீண்டும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியப்படி, அந்த பெண் மீண்டு ரூ.19,051 என்ற எண்ணை கூகுள் பேமெண்டஸில் பதிவு செய்துள்ளார்.


பணத்தை திருப்பி செலுத்துவதில் சில பிரச்சினைகள் இருப்பதால், கடை நிர்வாகி  அந்தப் பெண்ணிடம் வங்கிக் கணக்கு  விவரங்களைக் கேட்டுள்ளார். பணத்தைத் திரும்பப் பெற டெபிட்/கிரெடிட் கார்டு விவரங்களையும் அந்தப் பெண் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண் சிவிவி எண் மற்றும் கார்டு விவரங்களையும் பகிர்ந்துள்ளார். இதைப் பயன்படுத்தி கடை நிர்வாகி என்று சொல்லிய நபர், அவரின் வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்தி பல லட்ச கணக்கில் கொள்ளை அடித்துள்ளார்.


அந்தப் பெண்ணின் வங்கியில் இருந்து ரூ.48,000 மற்றும் ரூ.96,045 , ரூ. 1,71,754 தொகை மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அந்தப் பெண்ணின் மொபைலுக்கு தகவல் வந்துள்ளது. கிட்டதட்ட 5 லட்சம் வரை கொள்ளையடித்துள்ளனர். 


இதுகுறித்து அந்தப் பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்தப் பெண்ணில் வங்கி கணக்கை செயலிழக்க செய்துள்ளது. மேலும், விசாரணை செய்துள்ளது.