இந்திய மக்களின் ஓய்வூதிய சேமிப்பிற்காக மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2015ஆம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜ்னா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு நபர்கள் தங்களுடைய ஓய்வூதிய சேமிப்பு கணக்கை தொடங்கினர். 


 


இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் வருமான வரி செலுத்தியவர்களாக இருந்தால் இந்தத் திட்டத்தில் இணைய முடியாது என்ற புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்தப் புதிய விதியை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






இதற்கு முன்பாக வருமானவரி செலுத்தியவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்திருந்தால் அவர்களுடைய தொகை முழுவதும் திருப்பி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கணக்கில் அக்டோபர் 1ஆம் தேதி வரை உள்ள தொகை அனைத்தும் திருப்பி செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 


 


அடல் பென்ஷன் யோஜ்னா என்றால் என்ன?


 


மத்திய அரசு 2015ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அடல் பென்ஷன் யோஜ்னா திட்டம் மூலம் ஒருவர் தன்னுடைய ஓய்வூதிய திட்டத்திற்கான சேமிப்பை செய்ய முடியும். அவர்கள் 60 வயதை எட்டிய உடன் அவர்களுடைய சேமிப்பு தொகையின் அளவை பார்த்து மாதம் ஒரு ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது மாதம் 1000 ரூபாய், 2000 ரூபாய், 300 ரூபாய் மற்றும் 5000 ரூபாய் என்று ஓய்வூதிய தொகை கிடைக்கும். 


 


இந்த சேமிப்பு கணக்கை வைத்திருப்பவர்கள் உயிரிழந்துவிட்டால் அவர்களுடைய துணைவி/துணைக்கு இந்த மாத ஓய்வூதிய தொகை வரும். அவரும் உயிரிழக்கும் பட்சத்தில் நாமினியாக இருப்பவருக்கு அந்தச் சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை கிடைக்கும். இந்த ஓய்வூதிய திட்டம் தொடங்கியது முதல் பெரும் வரவேற்பு கிடைத்து வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது வரை சுமார் 4,31,86,423 கணக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


இந்தக் கணக்குகளில் வருமான வரி செலுத்தியவர்களின் கணக்குகள் ரத்தாகும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை பலரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண