நாட்டில் சகோதர, சகோதரிகள் இடையே சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ரக்சா பந்தன் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கொண்டாடப்படுகிறது.


 






இந்த தினத்தை முன்னிட்டு சகோதரர்களின் கைகளில் சகோதரிகள் ராக்கியை கயிறை கட்டுவர். ராக்கியைக் கையில் கட்டிய பெண்ணின் வாழ்க்கையில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் பக்க பலமாக நிற்பேன் உன அவர்கள் உறுதியளிப்பார்கள்.


காலபோக்கில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டாலும், குறிப்பாக வட மாநிலங்களிலேயே ரக்சா பந்தன் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.


 






பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் பிரதமர் அலுவலக ஊழியர்களின் குழந்தைகளுடன் ரக்சா பந்தனை கொண்டாடினார். பணியாளர்களின் குழந்தைகள் மோடியின் கையில் ராக்கியை கட்டி மகிழ்ந்தனர்.


பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள், பியூன்கள், தோட்டத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிறரின் மகள்களும் அடங்குவர்.


 






கொண்டாட்டத்தின் வீடியோவையும் அவர்களுடன் பிரதமரின் உரையாடலையும் அலுவலர்கள் ட்விட்டரில் பகிர்ந்தனர். முன்னதாக, பிரதமர் மோடி அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். "அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண