நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று பெங்களூர். கர்நாடக தலைநகரான பெங்களூரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகமுள்ள பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னையைப் போல மெட்ரோ சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்:
இந்த நிலையில், பெங்களூர் நகர மெட்ரோ ரயில்சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசு திட்டமிட்டது. இதன் காரணமாக, ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்தது. அதற்கான மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டது.
இதன்படி, ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்பட்டு நேற்று அந்த மெட்ரோ ரயில் பெட்டிகள் பெங்களூர் வந்தடைந்தது. தெற்கு பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஹெப்பகோடி டிப்போவிற்கு வந்தடைந்தது. இந்த புகைப்படங்களை பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலே முதன்முறை:
இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் ஆர்.வி. சாலை முதல் சில்க் சாலை வழியாக எலக்ட்ரானிக் சிட்டி வரை மஞ்சள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இதேபோல 216 பெட்டிகள் தயாரிக்க அந்த சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் 90 பெட்டிகள் 15 மெட்ரோ ரயிலாக மஞ்சள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் இயக்கப்படும் நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Electoral Bond: அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு! .. தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மேலும் படிக்க: Atrocities On Dalits: ”பணம் தரமாட்டியா?” பழங்குடியின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கும்பல் - என்ன நடக்குது இந்தியாவில்?