கொரோனா பெருந்தொற்று மீண்டும் மீண்டும் பரவிவரும் காலத்தில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை 200 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட புதிய மைல்கல்லை இந்திய அரசு எட்டி சரித்திரம் படைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிடிஐ செய்திக் குறிப்பில் இன்று தகவல் பகிரப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் ஒரேநாளில் 20,528 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 17,790 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,63,651 லிருந்து 4,30,81,441 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கொடிய தொற்றால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இதுவரை கொரோனா தொற்றால் 5,25,709 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் தேசிய COVID-19 மீட்பு விகிதம் 98.47 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கொரோனா எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும் தாண்டியது. செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும் தாண்டியது. , அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 அன்று 90 லட்சத்தையும் கடந்தது, டிசம்பர் 19 அன்று ஒரு கோடியைத் தாண்டியது. நாடு கடந்த ஆண்டு மே 4 அன்று இரண்டு கோடி மற்றும் ஜூன் 23 அன்று மூன்று கோடி என்ற மோசமான மைல்கல்லைக் கடந்தது. இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று நான்கு கோடியைத் தாண்டியது.