பொதுவாக ஒருவருடைய வீட்டில் இருக்கும் பொருட்கள் திருடு போய்விட்டால், அதை கண்டுபிடிக்க சில நாட்கள் காத்திருப்பார்கள். அதிலும் அந்த பொருள் தங்கம் என்றால் அதன் உரிமையாளருக்கு அந்த பொருள் கிடைக்கும் வரை மிகப்பெரிய சோகம். அப்படி ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்று 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குடும்பத்திற்கு அவர்களுடைய நகை கிடைத்துள்ளது. 


 


மும்பையில் சாரகா தின் என்ற துணிக்கடையை தொடங்கியவர் அர்ஜன் தஸ்வானி. இவருடைய வீட்டிற்குள் 1998ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி இரவு ஒரு மர்ம கும்பல் நுழைந்துள்ளது. அந்த கும்பல் வீட்டிலிருந்த அர்ஜன் தஸ்வால் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் தாக்கி கட்டிப் போட்டுள்ளது. அதன்பின்பு அவர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடியுள்ளனர். சில தங்க கட்டிகள், தங்க வளையல்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்து சென்றுள்ளனர். 


 


இந்த சம்பவம் தொடர்பாக அர்ஜன் தஸ்வானி குடும்பத்தினர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை அந்த ஆண்டு இறுதியில் சில நகைகளுடன் மூன்று பேரை கைது செய்தனர். எனினும் அந்த மூன்று பேரும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீண்ட நாட்கள் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தது. 




இந்த ஆபரணங்களுக்கான உரிய ஆவணங்களை காட்டி அர்ஜன் தஸ்வானி குடும்பத்தினர் இதை பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதற்குள் அர்ஜன் தஸ்வானி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த நகைகளை பெற முயற்சி செய்துள்ளார். அந்த வழக்கில் கடந்த 5ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், “இத்தனை நாட்கள் திருடு போன நகையை அந்த குடும்பத்திடம் வழங்காதது அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதி. ஆகவே உடனடியாக இந்த நகைகளை அக்குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 


 


நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து 1300 கிராம் தங்க கட்டி மற்றும் 200 மில்லி கிராம் தங்க கட்டி, 2 தங்க பிரேஸ்லெட் ஆகியவை திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நகைகளின் மதிப்பு 1998ஆம் ஆண்டு 13 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நகையின் மொத்த மதிப்பு சுமார் 8 கோடி ரூபாயாகும். திருடு போன நகைகள் சுமார் 22ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: `55 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!’ - அறிவிப்பை வெளியிட்டுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம்!