தமிழ்நாடு:



  • தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

  • வைகுண்ட ஏகாதேசி காரணமாக நேற்று இரவு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

  • திருப்பதியில் காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி. 

  • தமிழ்நாட்டில் நேற்று 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

  • நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வேண்டுகோள்.

  • ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கான முன்பதிவு நேற்றுடன் முடிந்தது.


இந்தியா:



  • கொரோனா பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

  • தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி பேச்சு.

  • எந்த ஒரு பாதுகாப்பு சவாலுக்கும் இந்திய ராணுவம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. 

  • இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

  • உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார்.

  • டெல்லியில் 1700 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. 


உலகம்:



  • பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. 

  • ஆஸ்கர் விருது வழங்கும் விழா திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் நடைபெறும்.

  • தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமாக இருக்கும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை. 


விளையாட்டு:



  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 13 ரன்கள் முன்னிலை

  • கேப்டவுன் டெஸ்டில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. 

  • கேப்டவுன் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட் அசத்தல்.

  • ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் வீரர்கள் எடுக்க 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.

  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலிருந்து கொரோனா காரணமாக வாஷிங்டன் சுந்தர் நீக்கம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண