இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த ஆண்டில் சுமார் 55 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானோரின் சேவைக்குத் தேவை அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிறந்த தொழில்நுட்பத்திற்கான போட்டியில் பல்வேறு நிறுவனங்கள் போட்டியிடும் சூழலில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்புகள் குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


கடந்த ஆண்டின் மூன்று காலாண்டுகளின் வருவாய் விவரங்களைச் சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டது. முந்தைய காலாண்டில் 16.5 முதல் 17.5 சதவிகிதமாக இருந்த வருவாய் தற்போதைய காலாண்டில் மூன்றாவது முறையாக உயர்ந்து சுமார் 19.5 முதல் 20 சதவிகிதத்தை எட்டியிருக்கும் நிலையில் அதன் மதிப்புகளின் சராசரி முந்தைய காலாண்டின் 20.1 சதவிகிதத்தை விட அதிகரித்து 25.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த ஆண்டில் சுமார் 45 ஆயிரம் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் எனத் தெரிவித்திருந்தது. 



இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார அதிகாரி நிலஞ்சன் ராய் இது குறித்து பேசிய போது, `நாங்கள் திறமையானவர்களைப் பணியில் அமர்த்துவதற்காகவும், உலகம் முழுவதுமான சர்வதேச வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக 2022ஆம் நிதியாண்டில் சுமார் 55 ஆயிரம் பேருக்குப் பணி வழங்கி எங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக முதலீடுகளை ஒதுக்குவதைப் பிரதானப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். 






இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள், மிக வேகமாக விற்கப்பட்டுள்ளதோடு, அதன் வளர்ச்சியும் பரந்த அளவில் நடைபெற்றுள்ளது. கடந்த மூன்றாம் காலாண்டில் மொத்தமாக சுமார் 2.53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மொத்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மேலும், கடந்த காலாண்டில் இயங்குவதற்கான வரம்பு நிதி சுமார் 23.5 சதவிகிதமாக இருந்ததும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான சலீல் பாரேக், `டிஜிட்டல் மாற்றங்களுக்கு விரும்பும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எங்கள் செயல்திறனும், பங்குச் சந்தை லாபங்களும் சாட்சி கூறுகின்றன. இது கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் வாடிக்கையாளர்களை டிஜிட்டல், க்ளவுட் ஆகியவற்றின் மூலமாக தொடர்பில் வைத்தபடியே, அவர்களின் தேவை மீது தொடர்ந்து கவனம் செலுத்தியது. எங்கள் பணியாளர்களின் திறனை வளர்த்தியது, எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் உருவான பந்தத்தைப் பாதுகாப்பது என நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக கிடைத்திருக்கிறது. வரும் 2022ஆம் நிதியாண்டில் நம் வருவாய் சுமார் 19.5 முதல் 20 சதவிகிதம் உயர்ந்திருப்பதன் காரணமாகவும் இது அமைகிறது’ எனக் கூறியுள்ளார்.