இந்தியாவில் மிகவும் மன உளைச்சல் தரும் பணிகளில் ஒன்று காவல்துறை பணி. காவல்துறையில் வேலை செய்யும் காவலர்களுக்கு சரியான ஓய்வு மற்றும் மன நிம்மதி கிடைப்பதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவர்களுக்கு சரியான விடுமுறை கூட கிடைப்பதில்லை. பல காவலர்கள் பண்டிகை நாட்களில் கூட தங்களுடைய குடும்பத்துடன் செலவிடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு கஷ்டமான காவல் பணியில் இருந்து கொண்டு ஒரு காவலர் தன்னுடைய மன அமைதிக்காக நடனமாடி வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட நடன வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி உள்ளது. யார் அவர்? எந்த வீடியோ அது?


மும்பை காவல்துறையில் நைகான் பகுதியின் காவல்துறை தலைமையகத்தில் பணிபுரிபவர் அன்மோல் யஷ்வந்த் காம்ப்ளே. இவர் தன்னுடைய பணி நேரங்களுக்கு பிறகு ஓய்வு நேரங்களில் நடனம் ஆடி மகிழ்வதை தன்னுடைய வாடிக்கையான பொழுதுபோக்காக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு இளைஞருடன் தன்னுடைய பணி முடிந்து வீடு திரும்பிய பிறகு மும்பை காவல்துறை உடையுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதில் தமிழில் வெளியான அண்ணாத்த ஆடுரார் என்ற பாடலின் இந்தி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். 


 






இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் 18 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். காவலர் ஒருவர் தன்னுடைய பணி சுமையை குறைக்க நடனம் ஆடுவது பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தவிர அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் பல வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 






 


மேலும் படிக்க: தயான்சந்த் விருது: ’ராஜீவ் பெயர் மாற்றம்; மோடியின் வெறுப்பு அரசியல்’ -நாராயணசாமி கொந்தளிப்பு!