இலங்கையில் இளைஞர் ஒருவர் காத்தாடியுடன் மேலே பறந்து செல்லும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இந்த வகையான பல வீடியொக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
அந்த வகையில், தற்போது இலங்கையில் இளைஞர் ஒருவர் காத்தாடியுடன் பறந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காத்தாடியின் நூலின் தொங்கியவாறு இளைஞர் பறந்து செல்கிறார். ஆனால், காத்தாடி இருப்பதுபோல தெரியவில்லை. இளைஞர் அந்தரத்தில் பறக்கும்போது, அவரின் நண்பர்கள் பதற்றத்துடன், முதலில் கையை விடு என்று கத்துகிறார்கள். அதன்பிறகு, நூலின் மீது காலை போடு என்று கூறும்போது, அவர் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்போது, கையை விடு என்று கூறியதும், இளைஞர் கீழே குதிக்கிறார். இதில், இளைஞருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், சிலர் இதை உண்மை என்றே கூறுகின்றனர்.
வீடியோவை பார்க்க:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்