டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு:
டெல்லியில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இருதரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அதில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரவி கபூர், அமித் சுக்லா, பல்பீர் மாலிக், அஜய் குமார் ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதமும், மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்ட அபராத தொகையில் ரூ.1.2 லட்சத்தை சௌமியா விஸ்வநாதனின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நான்கு பேருக்கு உதவியதற்காக ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அஜய் சேத்தி அபராத தொகையில் இருந்து ரூ.7.2 லட்சத்தை சௌமியா குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
"15 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது”
இந்நிலையில், சௌமியா விஸ்வநாதனின் தாயார் மாதவி கூறுகையில், "நான் என் மகளைத் திரும்பப் பெறமாட்டேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருப்தி அடைகிறேன். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. என் மகள் இல்லாமல் நானும் என் கணவரும் கஷ்டப்பட்டு வருகிறோம். என் கணவர் ஐசியுவில் இருக்கிறார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நீதிக்காக காத்திருந்தார். ஒருவகையில் நாங்களும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறோம். நாங்க ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுறது, அவங்க வாழ்நாள் முழுக்க கஷ்டப்படணும்னு நினைக்கிறேன். தவறு செய்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க