உலகம் முழுவதும் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் பெற்றோர்களுடன் வசிக்கும் குழந்தைகள் பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இப்படி ஒரு பக்கம் கொடூர சம்பவங்கள் நிகழ்ந்தாலும், மறுபக்கம் ஒரே குழந்தையின் தாய் பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்து தனது சொந்த மகனை 10 மாடியில் இருந்து இறக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பத்தாவது மாடியின் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை வயிற்றில் துணியை கட்டி எந்தவொரு பாதுகாப்பு உவகரணமும் இன்றி இறக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9வது மாடியில் உள்ள வீடு பூட்டி இருந்ததால் கீழே உள்ள பால்கனியில் தவறி விழுந்த சேலையை எடுத்து வர அவரது தாயார் மகனை பெட்ஷீட்டில் கட்டி, சேலையை எடுக்க கூறுகிறார். 






சேலையை எடுத்த அந்த பையன் தனது தாயாரிடம் அதுகுறித்து தெரிவிக்க, அவரது தாயும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அந்த சிறுவனை தாங்கள் வசிக்கும் பால்கேனிக்கு மேலே இழுகின்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த எதிர் கட்டத்தில் வசிக்கும் ஒரு நபர் இந்த வீடியோவை படம் எடுத்துள்ளார். 


இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தெரிவிக்கையில், பூட்டிய வீட்டிலிருந்து தனது சேலையை எவ்வாறு திரும்ப எடுப்பது என்பது குறித்து அந்தப் பெண் யாருடைய உதவியையும், ஆலோசனையையும் கேட்கவில்லை. மகனின் உயிரைக் கூட மதிக்காமல். அந்த தாய்க்கு சேலைதான் முக்கியமாக போய் விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அந்த பெண் யாரையாவது தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து இருந்தால் பராமரிப்பாளரே அதை எடுத்துகொடுத்து சென்று இருப்பார்.இதற்காக மகனின் உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு அவசியம் இருக்காது என்றும் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண