கடந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சிக்காக விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும், மேதைகளும் ஆற்றிய உழைப்பு தற்போது மாபெரும் வளர்ச்சியை தொட்டுள்ளது என்றே கூறலாம்.


டாப் 10 பட்டியலில் ஆபாச இணையதளம்:


எந்தவொரு விஷயத்தை பற்றியும் நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் அறிய இயலும். அந்தளவிற்கு செல்போனும், இணைய பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இணைய தளங்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் முன்னணி வலைதளங்களில் ஒன்று சிமிலர்வெப் (similarweb).


இந்த நிலையில், சிமிலர் வெப் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அதிகளவில் இணையதளத்தில் தேடப்பட்ட பக்கங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக முதல் 10 இடங்களில் ஆபாச இணையதளமும் இடம்பிடித்துள்ளது.


8வது இடம்:


சிமிலர்வெப் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அதிகமாக பயன்படுத்தப்பட்ட இணையதளங்களில் கூகுள் முதலிடத்தில் உள்ளது. கூகுள் நீண்ட காலமாக முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2வது இடத்தில் யூ டியூப்.காம் உள்ளது. 3வது இடத்தில் பேஸ்புக்.காம் உள்ளது. 4வது இடத்தில் இன்ஸ்டாகிராம்.காம் உள்ளது. 5வது இடத்தில் தனியார் செய்தி நிறுவனம் உள்ளது.


6வது இடத்தில் சாம்சங்.காம் உள்ளது. 7வது இடத்தில் கிரிக்கெட் இணையதளமான கிரிக்பஸ்.காம் உள்ளது. 8வது இடத்தில் ஆபாச இணையதளம் உள்ளது. 9வது இடத்தில் வாட்ஸ்அப்.காம் உள்ளது. 10வது இடத்தில் ட்விட்டர்.காம் உள்ளது.


உலகளவில் 10வது இடம்:


உலகளவில் கடந்த ஜனவரிமாதம் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணையதளமாக கூகுள் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் யூடியூப்.காம், 3வது இடத்தில் பேஸ்புக்.காம், 4வது இடத்தில் ட்விட்டர்.காம், 5வது இடத்தில் இன்ஸ்டாகிராம்.காம், 6வது இடத்தில் விக்கிபிடீயா உள்ளது. 7வது இடத்தில் பைடூ.காம் உள்ளது. 8வது இடத்தில் யான்டெக்ஸ்.ரூ உள்ளது. 9வது இடத்தில் யாஹூ.காம், 10வது இடத்தில் ஆபாச இணையதளம் உள்ளது.


உலகளாவில் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளங்களில் 10வது இடத்திலும், இந்திய அளவில் 8வது இடத்திலும் ஆபாச இணையதளம் இடம்பிடித்திருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகரித்த பின்னர் ஆபாச இணையதளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கொரோனா கால ஊரடங்களில் வீடுகளிலே மக்கள் முடங்கியபோது ஆபாச பட இணையதளங்கள் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Turkey Earthquake: துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்... இடிந்து விழுந்த கட்டடங்கள்: பதற்றத்தில் மக்கள்


மேலும் படிக்க: பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு விஷம்.. பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடும் கொடூரர்கள்.. ஈரானில் நடந்தது என்ன?