உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்த பிளேட்லெட்டுகளுக்கு பதில் சாத்துக்குடி சாறு நரம்பு வழியே ஏற்றப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாவட்ட நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் செய்த குளறுபடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதற்கு காரணமானவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரயாக்ராஜில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 32 வயதான நோயாளிக்கு 'பிளாஸ்மா' என குறிக்கப்பட்டிருந்த பையில் இருந்த சாத்துக்குடி சாறு நரம்பு வழியே ஏற்றப்பட்டுள்ளதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதையடுதநோயாளி இரண்டாவது தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் இறந்தார், இந்த இரண்டாவது மருத்துவமனையின் மருத்துவர்கள் அவர்களிடம் 'பிளேட்லெட்' பை போலியானது என்றும் உண்மையில் ரசாயனங்கள் மற்றும் இனிப்பு போன்ற அல்லது மோசாம்பி சாறு கலந்தது என்றும் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் வழங்கப்பட்ட பை ஒன்றில் இருந்து ரத்தம் ஏற்றப்பட்ட பிறகு நோயாளியின் உடல்நிலை மோசமடைந்ததாக நோயாளியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பிட்ட அந்த நோயாளி வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர், அங்கு அவர் மரணம் அடைந்துள்ளார்.
இரண்டாவது மருத்துவமனையின் மருத்துவர்கள் உறவினர்களிடம், அந்த பையில் ரத்த பிளேட்லெட்டு இல்லை என்றும் உண்மையில் ரசாயனங்கள் அல்லது சாத்துக்குடி சாறு கலந்த ஏதோ ஒன்று இருந்திருக்கிறது என்றும் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நபரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"எனது 26 வயதான சகோதரி விதவை. மருத்துவமனை மீது யோகி ஆதித்யநாத் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என நோயாளியின் உறவினர் சவுரப் திரிபாதி கூறினார்.
இது குறித்து துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் தனது ட்விட்டர் பதிவில், “மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக சாத்துக்குடி சாறு ஏற்றப்பட்ட வீடியோ வைரலானதை அறிந்து, எனது உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு சோனைக்காக பிளேட்லெட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்துள்ளார்.