தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் 6 நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் - கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட முடிவு 

  • பொதுவெளியில் கவனத்துடன் பேச வேண்டும் என மூத்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் 

  • தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • தென்கிழக்கு வங்கக்கட்ட பகுதியில் மே 7,8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • குளித்தலை அருகே கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்ட சிறுவர்கள் உட்பட 15 பேருக்கு உடல்நலக்குறைவு - சமையல் எண்ணெய் என நினைத்து பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தியதால் விபரீதம் 

  • திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது 

  • தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் நிகழ்ந்த விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு 

  • நேர்மையான விஏஓக்களுக்கு கைத்துப்பாக்கி வழங்கக்கோரி விஏஓக்கள் சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் 

  • மதுரையில் நாளை (மே 4) அனைத்து வகை மதுக்கடைகளையும் மூட உத்தரவு 

  • 9 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் -தமிழுக்கு ஆற்றிய தொண்டு குறித்து இடம் பெற்றுள்ளது

  • கோடை மழையால் ஆர்ப்பரித்து கொட்டும் கும்பக்கரை, திற்பரப்பு நீர்வீழ்ச்சிகள் - குவியும் சுற்றுலா பயணிகள் 

  • தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 9 லட்சம் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது - 3.75 லட்சம்  கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 10 நாட்களில் சரிசெய்யப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

  • என்.எல்,சி நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் தொடர்பாக 3 அமைச்சர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை - கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி 

  • கூவாகம் திருவிழாவில் திருநங்கைகளுக்கு தாலி கட்டு நிகழ்வு - நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் குவிந்தனர்

  • மிஸ் கூவாகம் பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த நிரஞ்சனா - மிஸ் இந்தியா, உலக அழகி பட்டங்களை வெல்வதே லட்சியம் என பேச்சு


இந்தியா: 



  • ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் - டிஜிட்டர் செய்தி வெளியிட்டாளர்கள், ஓடிடி நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு 

  • சூடானில் தீவிரமாகும் உள்நாட்டுப் போரால் சிக்கித் தவித்த மேலும் 328 இந்தியர்கள் இந்தியா திரும்பினர் 

  • தென்பெண்ணையாறு விவகாரத்தில் ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்படும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி 

  • மோடி பெயர் தொடர்பான வழக்கில் ராகுல்காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு - கோடை விடுமுறைக்குப் பின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு 


உலகம்:



  • ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுட்டுக்கொலை - சம்பள பிரச்சினையில் கொலை செய்த பாதுகாவலர் 

  • இலங்கை ராணுவ தளபதிகளுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு

  • அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 3 பேர் பலி

  • பிரேசிலில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு

  • காளி தேவியை அவமதிக்கும் வகையில் புகைப்படம் - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வருத்தம்


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடர்: குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றி

  • சென்னை - மும்பை இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடக்கம் 

  • டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தல்