ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.


ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர காவலர்கள் நடத்திய தேடுதலில், செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் 4 கார்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 


ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் செம்மரம் வெட்டி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திகிரியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.


செம்மரங்கள் எப்படி கடத்தப்படுகிறது?


கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க அரசு பல்வேறு ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி அவற்றை வனத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளிலோ புதைத்து வைத்து விட்டு, பின் போலீஸ் கண்காணிப்பு குறையும் போது, அவற்றை கடத்தி செல்வதாக கூறப்படுகிறது. 


செம்மரக்கட்டைகளை கடத்தப்படுவதை தடுக்க காவல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்தனர். இதன் மூலம் டோல்கேட்டை தாண்டி செல்லும் வண்டிகளில் செம்மரங்கள் கடத்தினாலும் அதை நாய்கள் கண்டறியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


செம்மரக்கட்டை கடத்தலுக்கு என்ன காரணம்?


ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்கிறது. இந்த செம்மரத்தில் இருந்து மருந்துகள், இசைக்கருவிகள், மரத்தால் ஆன பொருட்கள் உள்ளிட்டவை செய்யப்படுகின்றன. அதனால் இந்த செம்மரங்களுக்கு சீனாவில் அதிக மவுசு. இந்தியாவில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ செம்மர கட்டை சீனாவில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரேடியம், யுரேனியம் ஆகியவற்றை தயாரிக்கவும் செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. அணு உலையில் செம்மரக் கட்டைகள் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க 


Income Tax Raid: தொடரும் வரிமான வரித்துறை ரெய்டு.. சிக்கிய பிரபல ஜவுளிக்கடை... 60 இடங்களில் சோதனை..


Tamilnadu Cabinet: தமிழ்நாட்டில் 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்