தமிழ்நாடு:



  • இன்று இரவு டெல்லி புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கிறார்.

  • நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி உறுதியானது. டெல்லியில் அமித்ஷாவை சந்திந்த நிலையில் எடப்பாடி அறிவிப்பு.  

  • அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது உடன் இருந்த அண்ணாமலை. அதிமுகாவிற்கான தொகுதிகளை முன்னரே முடிவு செய்யுமாறு கேட்கப்பட்டதாக தகவல்.

  • சூடானை சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

  • சென்னை வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் நிலங்களை அளக்க ஆணை. நேரில் சென்று அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்ல ஏ.வி.பாலத்தில் புதிய பாதை அமைக்கும் பணி


இந்தியா:



  • சூடானிலிருந்து தாயகம் திரும்பிய 360 பேர். சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்.

  • சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள வெளியேற்ற நடவடிக்கை தீவிரம், ஆப்ரேஷன் காவேரி - கப்பல் மற்றும் விமானம் மூலம் மக்கள் ஜெட்டாவிற்கு அனுப்பி வைப்பு.

  • புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல். தமிழ்நாட்டில் மட்டும் 11 நர்சிங் கல்லூரிகள் அமையும் என தகவல்

  • மேற்கு வங்கத்தில் பள்ளியில் துப்பாகியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு. உரிய நேரத்தில் காவல் துறையினரின் நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு

  • கர்நாடகாவில் களைகட்டும் தேர்தல் பரப்புரை - பிராச்சாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி வத்ரே தோசை சுட்டு அசத்தல்

  • ஆப்ரேஷன் காவேரி - உள்நாட்டு போர் கலவரம் வெடித்துள்ள சூடானில் இருந்து இரண்டாவது கட்டமாக 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு

  • கர்நாடகாவில் களைகட்டும் தேர்தல் பரப்புரை - வரும் 29 ஆம் தேதி வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி. 


உலகம்:



  • சூடானில் உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றிய துணை ராணுவப்படை - பேராபத்து ஏற்படலாம் என ஐ.நா. எச்சரிக்கை

  • கென்யா: பாதிரியாரின் போதனையை கேட்டு உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

  • சமீபகால சர்ச்சைக்கு மத்தியில் தலாய்லாமாவுக்கு மகசேசே விருது - 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் வழங்கப்பட்டது

  • முதல் முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்க அனுமதி - போப் பிரான்சிஸ் நடவடிக்கை


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் அணி இன்று பலப்பரீட்சை

  • பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி கோப்பை கைப்பற்றியது

  • விபத்து ஏற்பட்டு மீண்டு வரும் ரிஷப் பண்ட் உலகக் கோப்பை போட்டியில் இடம்பெரும் வாய்ப்பு குறைவு