தமிழ்நாடு:
- தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - மாலை நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார்.
- சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே சென்னையை சேர்ந்த மாணவி ஜிஜி இந்திய அளவில் 107வது இடம் பிடித்து அசத்தல்
- தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
- வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
- தமிழ்நாட்டில் 53% வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக 4 நீதிபதிகள் பதவியேற்பு
இந்தியா:
- புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம் என தகவல் - குடியரசு தலைவருக்கு பதிலாக பிரதமர் கட்டத்தை திறக்க எதிர்ப்பு
- இரட்டை இயந்திரம் பிரச்னைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது - மம்தா பானர்ஜியை சந்தித்தபின் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பாஜகவை சாடினார்
- சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் செல்போன் எண் கேட்டு வற்புறுத்தக்கூடாது - மத்திய அரசு உத்தரவு
- மகாராஷ்டிராவில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் - சிவசேனா தலைவர் அறிவிப்பு
- ஏழுமலையான் கோயிலில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று வெளியீடு - பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்
- ஜி.எஸ்.எல். வி. எப்- 12 ராக்கெட் வருகிற 29ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது - ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட உள்ளதாக தகவல்
- ஜியோமார்ட் நிறுவனத்தில் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரிலையன்ஸ் முடிவு - மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், பாதிக்கும் மேற்பட்ட கடைகளை மூடவும் திட்டம் எனத் தகவல்
உலகம்:
- ஆஸ்திரேலியா சென்றடைந்த பிரதமர் மோடி - வரவேற்பதற்காக தனி விமானம் புக் செய்து சென்ற சிட்னி வாழ் தமிழர்கள்
- இந்தியாவில் திறமைக்கோ, வளங்களுக்கோ பஞ்சம் இல்லை - ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பேச்சு
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நீண்ட நாள் காதலியான லாரன் செசன்ஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்
- பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள் பலி - கயானாவில் சோகம்
- மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம் - பயனர் தரவுகளை அமெரிக்காவிற்கு வழங்கிய வழக்கில் தீர்ப்பு
விளையாட்டு:
- நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் - குவாலிபையர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி அபாரம்
- எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை
- ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க 8-9 மாதங்கள் உள்ளன - சென்னை அணி கேப்டன் தோனி விளக்கம்
- ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றில் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகள் நடத்திட்டம் - பிசிசிஐ அறிவிப்பு
- திரிபுரா சுற்றுலாத்துறை தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி நியமனம்
- உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று அட்டவணை வெளியீடு - எதிரெதிர் பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணி