தமிழ்நாடு:



  • நாட்டை காப்பாற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் - தேர்தல் பணிகளில் விரைந்து பணியாற்றுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் 

  • நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவை ஆய்வு செய்ய வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் 

  • முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் மே 23 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் - ஜப்பான், சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் 

  • அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்த சர்ச்சை ஆடியோ விவகாரம் - உரிய விசாரணை நடத்துமாறு ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்த தமிழ்நாடு பாஜகவினர் 

  • 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு தாளில் கேட்கப்பட்ட தவறான கேள்வி - முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு 

  • 12 மணி நேர வேலை நிறுத்த சட்டம் நிறைவேற்றம்: எதிர்ப்பு தெரிவித்து மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் 

  • மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தங்க தேரோட்டம் - 4 மாசி வீதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் 

  • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழை - ஒன்றரை லட்சம் வாழை மரங்கள் சேதம் 

  • திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் இரவு முழுவதும் பற்றியெரிந்த தீ - 20 வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம் 

  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்தது - பொதுமக்கள் மகிழ்ச்சி 

  • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு - 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கணிப்பு 

  • கூடலூரில் தடையை மீறி பிளாஸ்டிக் கொண்டு வந்தவர்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அபராதம் - கேரள சுற்றுலாப்பயணிகள் வாக்குவாதம் 

  • திருச்சியில் இன்று மாலை மாநாடு நடத்தும் ஓபிஎஸ் தரப்பு - அதிமுக தலைமை அலுவலகம் போன்று மேடை அமைப்பு 

  • நெல்லை மாவட்டம் காரையாறு அணையில் நீர்மட்டம் குறைவால் வெளியே தெரியும் முதலைகள் - பொதுமக்கள் அச்சம் 


இந்தியா:



  • நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் நீர் மெட்ரோ சேவை இன்று தொடக்கம் - இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

  • பாலியல் தொல்லை விவகாரம்: 3 மாதங்கள் ஆகியும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாததை கண்டித்து மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் 

  • கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் - 2 தொகுதிகளிலும் வேட்புமனுவை திரும்ப பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு தகவல் 

  • கொல்கத்தாவில் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து  - போராடி அணைத்த தீயணைப்பு படையினர் 

  • காலிஸ்தான் கிளர்ச்சியாளர் அம்ரித்பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது - விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அசாம் சிறையில் அடைப்பு 

  • சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்தது இந்திய போர்க்கப்பல் - சவூதி அரேபியா ஜெட்டாவில் இரு இந்திய விமானங்களும் நிறுத்தி வைப்பு 


உலகம்:



  • சூடானில் இருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150 பேர் மீட்பு - சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் 

  • 2050 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சு - இந்தியாவுடன் இணைந்து இலங்கையை முன்னேற்றும் நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தல் 

  • இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் அடுத்தடுத்து முதியவர்கள் கொலை - நகைக்காக கொலை செய்தவர் கைது 

  • அமெரிக்காவின் டிஸ்னிலேன்ட் பூங்காவில் தீ விபத்து  45 அடி உயர டிராகன்  பொம்மை முற்றிலும் சேதம் 


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடர் : ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி 

  • ஐபிஎல் தொடர்: கொல்கத்தா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்