தமிழ்நாடு:



  • நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் மதுரை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் - சென்னையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்

  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் - திமுக நிர்வாகிகள் மத்தியில் கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு

  • மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு - லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் விழாக்கோலம்

  • மாநாட்டில் பங்கேற்க மதுரை சென்றடைந்த அதிமுக பொதுச்செயலாளர் - வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

  • ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

  • தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்

  • வாட்ஸ்-அப் டிபியில் இருக்கும் இளம் பெண்களின் புகைப்படங்களை திருடி ஆபாசமாக சித்தரித்த இளைஞர் - 926 பேரை ஏமாற்றி பணம் சுருட்டல்

  • நாளை முதல் 3 நாட்கள் கிண்டி காந்தி மண்டபம் பாலம் ஒருவழிப்பாதையாக இயங்குமென அறிவிப்பு - போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சோதனை முயற்சி


இந்தியா:



  • தென் ஆப்ரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப்பயணம்

  • சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் இறுதிக்கட்ட வேகக்குறைப்பு வெற்றிகரமாக நிறைவு - திட்டமிட்டபடி 23ம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்பு

  • லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 9 வீரர்கள் உயிரிழப்பு - குடியரசு தலைவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்

  • வெங்காயத்திற்கு 40 சதவிகிதம் ஏற்றுமதி வரி விதிப்பு - மத்திய அரசு அதிரடி

  • ஆன்லன் மூலம் விண்ணப்பித்த 2 நாட்களில் கடன் பெறும் வகையில் நாட்டில் டிஜிட்டல் புரட்சி  - மத்திய அமைச்சர்  அஸ்விணி வைஷ்ணவ் கருத்து 

  • உத்தரபிரதேச முதலமைச்சர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த் - புகைப்படங்கள் இணையத்தில் வைரல்


உலகம்:



  • சிறையில் இம்ரான் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என அவரது மனைவி அச்சம்

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் ஷா மெஹ்மூத் குரேஷி கைது

  • உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு

  • உலகையே சிரிக்க வைத்த மீம்ஸ் நாய் மரணம் - உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி பலி

  • சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் - திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷ்யாவின் லூனா விண்கலம்


விளையாட்டு:



  • இந்தியா - அயர்லாந்து இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது - தொடரை வெல்ல இந்திய அணி தீவிரம்

  • உலகக்கோப்பை சதுரங்க தொடரில் அரையிறுதி முதல் சுற்று போட்டி: இந்தியாவின் பிரக்ஞானந்தா அமெரிக்காவின் ஃபேபியானா கருவான இடையேயான போட்டி சமனில் முடிந்தது

  • மகளிர் கால்பந்து உலக்க்கோப்பை இறுதிப்போட்டி - ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை

  • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்