தமிழ்நாடு:
- 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்
- அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு அளித்த 74.3 கோடி நிதி வீண்: சிஏஜி அறிக்கையில் பகிரங்க குற்றச்சாட்டு
- ’கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் எதிரொலியால் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை
- 5ம் தேதி ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் 750 கன அடி நீர் திறப்பு : 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
- அமைச்சர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எக்காரணம் கொண்டும் மின் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்று மின் வாரியத்திடமிருந்து மின்சாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்துள்ளது.
- ஓபிஎஸ் கொடியை பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர மக்கள் அங்கீகரித்ததாக தெரியவில்லை. அதனால் வழக்கு தொடுக்க வேண்டிய அவசியமில்லை என எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார்.
- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தியா:
- பஞ்சாப் தொழிற்சாலையில் விஷ வாயு கசிவால் மூச்சுத்திணறி 11 பேர் பலி - உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 பேர் அட்மிட்
- 4 லட்சம் இடங்களில் ‘மனதின் குரல்’ நிகழச்சி 100வது முறையாக பிரதமர் மோடி உரை - உலகம் முழுவதும் 63 மொழிகளில் ஒளிபரப்பு
- கர்நாடக மாநில தேர்தல் பார்வையாளராக தமிழகத்தை சேர்ந்த 11 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- பாஜகவை 40 சதவீத கமிஷன் என குற்றம்சாட்டும் காங்கிரஸ் 85% கமிஷனில் தொடர்புடையது - பிரதமர் மோடி ஆவேசம்
- 2025 ம் ஆண்டுக்குள் இந்திய தடுப்பூசிகளின் சந்தை ரூ.25,000 கோடியை எட்டும்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
- சூடானில் இருந்து மீட்கப்பட்ட 18 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி விமான நிலையம் வந்தடைந்ததை அடுத்து பின் அங்கிருந்து சென்னை வந்தனர்.
- தொழிலாளர்களையும் தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை போற்றும் வகையிலும் மே தினம் (May Day) (உழைப்பாளர்கள் தினம்), ஒவ்வொரு ஆண்டு மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலகம்:
- ரஷ்ய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதால் சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து உக்ரைன் விலக முடிவு செய்துள்ளது.
- நேபாள குடியரசு தலைவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- ட்விட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை 14 நாட்கள் குறைத்து எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
- சதுரங்க போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசியை வீழ்த்தி சீன வீரர் டிங் லீரன் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.