தமிழ்நாடு:
- 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு இன்று வெளியாகிறது தேர்வு முடிவுகள்: இணையதளங்களில் பார்க்கலாம்
- கோவையில் இன்று தமிழ்நாடு பாஜக செயற்குழு கூடம் : கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
- ராஜிவ் காந்தி நினைவு நாள்; ராகுல் காந்தி 21ம் தேதி தமிழ்நாடு வருகை : ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
- மரக்காணம் விஷ சாராயம் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு அரசியல் சதி உள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
- கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- விஷ சாராயம் குடித்து பல பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டவுடன் முதலமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார் - அமைச்சர் துரைமுருகன்
- தமிழகத்தில் விரைவில் உண்மையான வெண்மை புரட்சி ஏற்படுத்துவோம் - அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
இந்தியா:
- கொலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் : கிரண் ரிஜிஜூவிடம் இருந்து சட்டத்துறை இலாகா மாற்றம்
- தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும்; ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- கர்நாடகாவில் முதலமைச்சராக சித்தராமையா தேர்வு: துணை முதலமைச்சராகிறார் டி.கே. சிவக்குமார்
- சிறப்பு திருமண சட்டத்தின்படி காணொலி மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொள்ளலாம் - கேரளா உயர்நீதிமன்ற உத்தரவு
- ‘தி கேரளா ஸ்டோரி’ பட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தப் படம் பார்க்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
- இணை செயலாளர், இயக்குனர்களாக அரசு துறைகளில் தனியார் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை - மத்திய அரசு அறிவிப்பு
- கர்நாடக தேர்தல் முடிவுகளால் நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை - பசவராஜ் பொம்மை
உலகம்:
- இத்தாலியில் தொடர் கனமழை - ஆயிரக்கணக்கானோர் வீடுகள் சேதம், 13 பேர் உயிரிழப்பு.
- ஜப்பான் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
- ஜப்பானின் ஜி-7 உச்சி மாநாடு இன்று தொடக்கம்
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஹாக்கி தொடர் - முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி
- ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.
- ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார்.