தமிழ்நாடு:’



  • நாட்டின் 77வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் - சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

  • நீட் தொடர்பான மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் - குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

  • சுதந்திர தினத்தையொட்டி வழங்கப்பட இருந்த தேநிர் விருந்தை ஒத்திவைப்பதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு - விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில் நடவடிக்கை

  • சுதந்திர தின விழா - சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

  • பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்  கொட்டி தீர்த்த கனமழை - சென்னை - திருச்சி சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

  • சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு


இந்தியா:



  • 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் - தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு

  • டெல்லியில் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி - 10வது முறையாக கொடியேற்ற மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்கிறார்

  • பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முன்னுரிமை தர வேண்டும் - சுதந்திர தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

  • சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் 954 காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு - தமிழகத்தை சேர்ந்த 21 பேருக்கு பதக்கம்

  • பிரமிப்பூட்டும் ஏஐ தொழில்நுட்பம் - தேசிய கீதம் பாடும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடியோ வைரல்

  • இந்தியா உண்மையிலேயே வெற்றிபெற பெண்களுக்கு சம இடம் கொடுக்க வேண்டும் - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்

  • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீதான லஞ்ச குற்றச்சாட்டு - முழு விவரங்களையும் ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை என மாநில ஆளுநர் தகவல்

  • தமிழர்கள்  தமிழ் உடன் இந்தி மொழியையும் கற்க வேண்டும்  - உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

  • இந்தியா - சீனா 19வது சுற்று பேச்சுவார்த்தை - கிழக்கு லடாக்கில் ராணுவ துருப்புகள் திரும்பப் பெறப்படுமா?

  • இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழை - நிலச்சரிவு, பெருவெள்ளத்தில் சிக்கி 24 மணி நேரத்தில் 50 பேர் பலியானதாக தகவல்

  • காவிரி விவகாரம் - தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்


உலகம்:



  • எத்தியோப்பியாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 26 பேர் பலி - நீண்ட நாட்களாக தொடரும் ராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகள் இடையேயான மோதல்

  • கம்போடியாவில் பள்ளி வளாகத்தில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

  • மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி - மாயமான 30 பேரை தேடும் பணிகள் தீவிரம்

  • கிரீமிய தாக்குதலுக்கு பொறுப்பேற்ற உக்ரைன் - ரஷ்யா கண்டனம் 

  • ரஷ்யாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து - 12 பேர் உயிரிழப்பு


விளையாட்டு:



  • ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு திரும்பு ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் - பயிற்சியாளர் டிராவிட் சூசக தகவல்

  • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாட தவறிவிட்டேன் - தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேச்சு

  • உலகக்கோப்பை தொடருக்காக மீண்டும் ஒருநாள் போட்டிக்கு வருகிறார் பென் ஸ்டோக்ஸ் - ஓய்வு முடிவை திரும்பப் பெற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுறுத்துவதாக தகவல்

  • கனடா ஓபன் டென்னிஸ் - மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா 

  • 65 அணிகள் பங்கேற்கும்  பெர்ட்ராம் விளையாட்டு போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்