தமிழ்நாடு:



  • சென்னை, விழுப்புரம், கரூர் உள்பட தமிழ்நாட்டில் பரவலாக இரவில் கனமழை பெய்தது.

  • கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளன.

  • நெல்லை: நாங்குநேரி அருகே திருமலை நம்பிகோயில் மலைப்பகுதியில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

  • பெருந்துறை அருகே பொறியியல் கல்லூரி மாணவர்கள் 92 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.

  • உசிலம்பட்டி அருகே மெய்யனம்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றின் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் 8 பெண்கள் காயம்.    

  • சென்னையில் ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

  • இன்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: கலைஞர் இருந்த செய்ய வேண்டிய செயலை, அவரது மகனாக இருந்து செய்து வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

  • சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. A

  • BP - Cvoter எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, அதிமுக கூட்டணிக்கு 21 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • எங்கள் தலைவர் விஜய்தான் அறிவிப்புகளை வெளியிடுவார்; என்னுடைய பணி இதுதான் - புஸ்ஸி ஆனந்த்

  • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது , அதனை புறந்தள்ளி விடவும் முடியாது - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு


இந்தியா: 



  • நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல், புதிய சுங்கக் கட்டணம் அமலுக்கு வந்தது.

  • மத்தியபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்த்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

  • பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கொடுக்க வேண்டும் என்று யாரோ அறிவுறுத்தியிருக்க வேண்டும் என கருத்து கணிப்புகள் குறித்து கெஜ்ரிவால் தெரிவித்தார்.

  • அருணாச்சல பிரதேசத்தில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

  • சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

  • 295 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - ராகுல் காந்தி உறுதி. 

  • ஆசியாவின் பெருங்கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி முதலிடம் பிடித்துள்ளார் கவுதம் அதானி. 

  • வாக்குப்பதிவு கருத்துக்கணிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சனம். 


உலகம்: 



  • மியான்மரில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு.

  • தஜிகிஸ்தானில் பூமிக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு.

  • துருக்கியில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்ததில் 7 பேர் படுகாயம்.

  • ஜெர்மனியில் கனமழை: வெள்ளப்பெருக்கால் 1, 300 பேர் வெளியேற்றம்.

  • ஐஸ்லாந்தின் புதிய அதிபராக ஹல்லா தோமஸ் டோட்டிர் தேர்வு.

  • இலங்கையில் அடுத்தடுத்து இடி, மின்னலுடன் கனமழை - இதுவரை 15 பேர் உயிரிழப்பு என தகவல். 


விளையாட்டு: 



  • டி20 உலகக் கோப்பை 2024: தென்னாப்பிரிக்கா - இலங்கை இன்று பலப்பரீட்சை.

  • இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க தயார் - கவுதம் கம்பீர் விருப்பம்.

  • குத்துச்சண்டை தகுதி சுற்றில் வெற்றி: ஜாஸ்மின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று அசத்தல்