தமிழ்நாடு:



  • விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் 

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் டாக்டர் அபிநயா அறிவிப்பு 

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிப்பு

  • உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இனி ரூ.1000 மாதம் வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் 

  • குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - கண்ணீர் மல்க இறுதிசடங்கு 

  • அதிமுகவை காப்பாற்றுவதே முக்கியம் - எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

  • சென்னை நந்தனம் ஆடவர் கல்லூரி 2025 ஆம் ஆண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றம் - அரசாணை வெளியீடு 

  • சிறைக்கு சென்று ஓராண்டு நிறைவு - செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிப்பு

  • தமிழ்நாட்டை உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை - சென்னை உயர்நீதிமன்றம் 

  • டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • பிரதமர் மோடி ஜூன் 20ல் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் - வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்

  • திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் - துபாயில் இருந்து வந்த பயணியிடம் விசாரணை

  • 61 நாட்கள் தடைகாலம் முடிந்து மகிழ்ச்சியாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 

  • கோவையில் நடக்கும் திமுக முப்பெரும் விழாவால் எந்த பயனும் இல்லை என அண்ணாமலை விமர்சனம்

  • தொடர் விடுமுறை எதிரொலி - தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் 


இந்தியா: 



  • முன்பதிவு செய்த பெட்டிகள் சாதாரண பயணிகள் பயணிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை - மத்திய அமைச்சர் உறுதி

  • இமாச்சலப்பிரதேசத்தில் 114 டிகிரி வெப்பநிலை பதிவு - மக்கள் அவதி

  • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத்தில் 5 பேர் கைது 

  • நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய கல்வி அமைச்சர் தகவல்

  • கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் - கொத்து கொத்தாக காகங்களும் இறப்பதால் பரபரப்பு 

  • போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஹேமா விடுவிப்பு

  • புதுச்சேரியில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வு அமல் 

  • கொல்கத்தா வணிக வளாகத்தில் பயங்கர தீ - உள்ளே இருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்பு 

  • புனே கார் விபத்து சம்பவம் - குற்றவாளியின் பெற்றோருக்கு 2 வாரம் நீதிமன்றம் காவல் 


உலகம்: 



  • இத்தாலி நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்கள் இடையே கைக்கலப்பு - அமைச்சர் மீது தாக்குதல்

  • குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

  • போப் பிரான்சிஸை சந்தித்த பிரதமர் மோடி - கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தினர்

  • அபுதாபியில் பறக்கும் டாக்ஸி சேவை சோதனை வெற்றி - அடுத்த ஆண்டு முதல் அமல் 


விளையாட்டு: 



  • 2024 டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா - அயர்லாந்து இடையேயான ஆட்டம் மழையால் ரத்து - அமெரிக்கா சூப்பர் 8க்கு தகுதி

  • அமெரிக்கா சூப்பர் 8க்கு தகுதி பெற்றதால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம் 

  • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறியது 

  • டி20 உலகக் கோப்பை இன்று நடக்கும் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா -நேபால், உகாண்டா -நியூசிலாந்து, இந்தியா - கனடா, நமீபியா - இங்கிலாந்து அணிகள் மோதல்