தமிழ்நாடு:



  • விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம் 

  • விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நாளை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை

  • திருவண்ணாமலையில் காட்டுப் பகுதியில் போதை விருந்து நடத்திய ரஷ்ய பெண் கைது

  • இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது 

  • குவைத் நாட்டில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு - உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரம் 

  • குவைத் நாட்டு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

  • குவைத் நாட்டு தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் 

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் - எடப்பாடி பழனிசாமி தகவல் 

  • வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்க ஜூன் 17 வரை மட்டுமே அவகாசம் - போக்குவரத்து துறை அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

  • குவைத் தீ விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 9 நாட்கள் மட்டுமே நடத்துவதா? - அதிமுக கடும் கண்டனம் 

  • சென்னையில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழை - மக்கள் மகிழ்ச்சி 

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு - கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்குப் பின் முடிவு என அன்புமணி ராமதாஸ் தகவல்


இந்தியா: 



  • நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு - உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

  • நீட் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து - மறு தேர்வில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என அறிவிப்பு

  • நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஜூன் 26ல் நடைபெறும் என அறிவிப்பு

  • ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

  • நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை 

  • சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தன்னை அமித்ஷா கண்டித்ததாக வெளியான தகவலை மறுத்த தமிழிசை

  • இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 3வது முறையாக நியமனம் 

  • போதிய வரவேற்பு இல்லாததால் ஹைதராபாத் - அயோத்தி இடையேயான விமான சேவை ரத்து

  • அமராவதி தலைமைச் செயலகத்தில் முறைப்படி முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு - 5 கோப்புகளில் கையெழுத்து

  • நாக்பூர் அருகே தொழிற்சாலையில் வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு


உலகம்: 



  • குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 45க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு - விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

  • தீ விபத்து சம்பவம் எதிரொலி - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் சென்றார்

  • ஜி7 மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என சவுதி அரேபிய இளவரசர் அறிவிப்பு

  • மங்கோலியாவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 70 லட்சம் கால்நடைகள் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • 2024 டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

  • டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்து அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம்

  • டி20 உலகக் கோப்பை: ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி