தமிழ்நாடு: 



  • அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்; பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கிலும் இன்று தீர்ப்பு

  • அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள் -  டிடிவி. தினகரன் பேட்டி

  • மீனவப் பெண்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள் என ஒரு கோடி பேருக்கு மாதம் ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்

  • டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி - அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் 

  • டி.என்.பி.எஸ்.சியில் சீர்திருங்கள் கொண்டுவருவதை அனைவரும் ஆதரிக்க வேண்டும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை

  • குரூப் 4  தேர்வு முடிவில் 25 பேர் முடிவை வெளியிடவில்லை என புகார் -  மதிப்பீடு செய்ய தகுதியற்றது என டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

  • விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பல்வீர் சிங்

  • சென்னையில் அதிமுக நிர்வாகி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை; தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் காவல்துறை 

  • பாஜக நிர்வாகியின் சாதிகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவு; ராமநாதபுரம் பொறுப்பாளர்களை கூண்டோடு நீக்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலை

  • தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  • தர்மபுரியில் சட்டவிரோத கருக்கலைப்பு மைய்ய விவகாரம்; குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய ரூபாய் 30 ஆயிரம் வரை வசூல்

  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாலையில் நொருக்குத் தீனி; மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிப்விப்பு 

  • சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் மூன்று பேர் ஆஜர்; விசாரணை முடிந்து வந்தவர்களை வழக்கிறிஞர்கள் தாக்கியதால் பரபரப்பு


 


இந்தியா



  • துவரம் பருப்பு கையிறுப்பை கணக்கிட மத்திய நுகர்வோர் துறை செயலாளர் தலைமையில் குழு; செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு திட்டம் 

  • அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்; மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை

  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியும் அதானி நிறுவனத்தில் முதலீடு; அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் வைப்பு நிதியின் வட்டியும் குறைய வாய்ப்பு

  • அதானி குழுமத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு குறித்து விசாரனை நடத்தாதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி

  • ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்; கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

  •  முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது -  ஆய்வுக்குழு அறிக்கை

  • கர்நாடகாவில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்


உலகம்




  • துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 28 பேர் படகு கடலில் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு




விளையாட்டு



  • ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகு அணிகள்; உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

  • சென்னை அணி போட்டிக்கான டிக்கெட்டுகள் அரை மணிநேரத்தில் விற்று தீர்ந்தன