ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு முக்கியப் பிரச்னைகள் நிலவி வரும் நிலையில் ,அது தொடர்பான விவாதங்களும் இந்த கூட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.