ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது ஹசரிபாக். இங்கு அரசுப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளி அமைந்துள்ள பகுதியில் காடுகள், மரங்கள் அதிகளவில் இருப்பதால் குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த குரங்குகள் அவ்வப்போது ஹசரிபாக் பகுதியில் உள்ள  வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மிகவும் எளிமையாக இந்த குரங்குகளை காண முடியும்.






இந்த நிலையில், ஹாசியாபாக்கில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்களுடன், மாணவர்களாக குரங்கு அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுப்பதை கவனிக்கும் வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






அந்த பள்ளியில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை ஆசிரியர் ஒருவர் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, வகுப்பிற்குள் நுழைந்த குரங்கு ஒன்று மாணவர்களின் பின்வரிசையில் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தது. பின்னர், அமைதியாக வேறு பக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு குரங்கு அமர்ந்துவிட்டது.






மேலும், அதே பள்ளியில் மற்றொரு வகுப்பிற்குள் நுழைந்த குரங்கு மாணவர்கள் வகுப்பிற்காக தயாராக உட்கார்ந்திருந்தபோது, அவர்களுக்கான முதல் மேசையில் அமர்ந்துகொண்டது. எந்த மாணவருக்கும் இடையூறு செய்யாமல் குரங்கு மேஜை மீது அமர்ந்து கொண்டது. தற்போது இந்த வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 


இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அரசுப்பள்ளிகளில் இதுபோன்று குரங்குகள், பறவைகள், விலங்குகள் வகுப்பு நேரங்களில் உள்ளே வந்துவிடுவது என்பது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 


மேலும் படிக்க : Lottery : அடிச்சான் பாரு அப்பாய்ட்மெண்ட் ஆர்டர்.. 25 கோடி ரூபாய்.. லாட்டரியை வென்ற ஆட்டோ ஓட்டுநர்..


மேலும் படிக்க : 25 ஆண்டுகால கொலை வழக்கு.. நடிகர்களாக மாறி பெர்ஃபாமன்ஸ் கொடுத்து கொலையாளியை பிடித்த போலீஸ்..


மேலும் படிக்க : Video : வளர்ப்பு நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்து பயணித்த கொடூரம்.. பிரபல மருத்துவர் மீது வழக்குப்பதிவு..