இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட  வான்வழி சாகசங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.







ஒடிசாவில்  பூரி பகுதியில்  இருந்து புறப்பட்ட சூர்யகிரண ஏரோபாட்டிக் குழுவினர் ஒன்பது பேரும் ப்ளூ ஃபிளாக் கடற்கரையில் பிரமிக்க வைக்கும் வான் சாகசங்களை நிகழ்த்திக்காட்டினர். ஒடிசா கவர்னர், பேராசிரியர் கணேசி லால் கலந்து கொண்டு, சூர்யகிரண் விமான கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது IAF இன் மற்ற அதிகாரிகளும் உடனிருந்தனர். IAF குழுவின் துணிச்சலைக் காண ப்ளூ பிளாக் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.தலைகீழாக பறத்தல், டைவிங் அடித்தல் ,சுழல்கள், பீப்பாய் ரோல்கள் மற்றும் பிற மூச்சடைக்கக்கூடிய வான்வழி சாகசங்களை சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழுவினர் நிகழ்த்திக்காட்டினர். தரையில் இருந்து வெறும் 500 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு மேல் நடைப்பெற்ற சாகச காட்சிகளை அப்பதியில் குழுமியிருந்த பொதுமக்கள் உற்ச்சாகத்துடன் கண்டுகளித்தனர். அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். சனிக்கிழமை இந்த சாகசங்களுக்கான ஒத்திகை நடைப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.







முன்னதாக  IAF இன் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு நடத்திய ஸ்பெல்பைண்டிங் வான் சாகச நிகழ்ச்சி ஒடிசாவின் புவனேஸ்வரில் கடந்த செப்டம்பர் 16 அன்று  நடைபெற்றது. SKAT உலகின் ஒன்பது விமான காட்சி அணிகளில் ஒன்றாகும். இந்த ஏரோபாட்டிக்  சாகச கண்காட்சியின் நோக்கம், இந்திய விமானப்படை விமானிகளின் தொழில்முறை மற்றும் திறமையை முன்னிலைப்படுத்துவதுடன், நாட்டின் இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுதுவதாகும்.SKAT இப்போது பிரிட்டிஷ் விமானங்களை இயக்குகிறது. அதாவது BAE Hawk விமானங்கள் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் டீம் (SKAT) 1996 இல் நிறுவப்பட்டது. இது இந்திய விமானப்படையின் 52வது படைப்பிரிவின் ஒரு பகுதியாகும். பாதுகாப்பு அமைச்சகம் 2015 அக்டோபரில் HAL மற்றும் BAE சிஸ்டம்ஸ் இடையே இருபது BAE சிஸ்டம்ஸ் Hawk Mk.132 விமானங்களை சூரிய கிரணுக்காக வாங்குவதற்கான ஒப்பந்தங்களை செய்திருந்தது.  இந்த விமானங்களில் ஏரோபாட்டிக்ஸ் காட்சிகளுக்காகவே புகை குப்பிகள் போன்ற சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.