ஒவ்வொரு மாநில மொழியும் இந்திய நாட்டின் அடையாளமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


மேலும், கடந்த சில நாட்களாக மொழியின் பெயரால் சர்ச்சையைக் கிளப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  ஒவ்வொரு மாநில மொழியும் நம் நாட்டை பிரதிபலிப்பதை பாஜக காண்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். 


 






மேலும், நாட்டின் ஒவ்வொரு மாநில மொழிக்கும் தாங்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும், அனைத்து மாநில மொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தி சர்ச்சை!


ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இந்தி மொழியே இணைப்பு மொழி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் தெரிவித்தார். இதற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலரும் எதிர்க் கருத்துகளை முன் வைத்திருந்தனர். 


அதனைத் தொடர்ந்து இந்தி தேசிய மொழி எனக் குறிப்பிட்டு நடிகர் அஜய் தேவ்கன் முன்னதாக ட்வீட் செய்த நிலையில், வட இந்திய மற்றும் தென்னிந்திய திரைப் பிரபலங்களுக்கிடையே ட்விட்டரில் கடும் வாக்குவாதம் வெடித்தது. 


முன்னதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும்  அலுவலகப் பதிவேடுகள்,பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்









 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண