பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற நிலையில், இன்று கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடோகிஸ் தங்களது நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.


கிரீஸ் நாட்டில் பிரதமர் மோடி:


அவரது அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிறகு இன்று கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 40  ஆண்டுகளில் கிரீஸ் நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.


கிரீஸ் நாட்டின் சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி,” பழமையான மண்ணிற்கு இது எனது முதல் பயணம். இரண்டு நாகரீகங்களுக்கு இடையேயான பல மில்லியன் ஆண்டுகளாக தொடர்பு உள்ளது. இந்த நவீன காலத்தில், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்மைத்துவத்தின் பகிரப்பட்ட மதிப்புகளால் எங்கள் உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


ஒப்பந்தங்கள்:


வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையயான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நமது இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வருகிறது. எனது கிரீஸ் வருகை எங்கள் பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறக்கும் என எதிர்பார்க்கிறேன்.


இவ்வாறு அவர் கூறினார். ஏதென்ஸ் நகரில் பிரதமர் மோடி - கிரீஸ் பிரதமரை நேரில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.






இந்தியா – கிரீஸ் நாட்டிற்கு இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, கிரீஸ் ஆதரவு தெரிவித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கும் கிரீஸ் ஆதரவு தெரிவித்து வருகிறது.


40 ஆண்டுகள்:


கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு அந்த நாட்டு குடியரசுத் தலைவர் காத்ரினா, பிரதமர் மற்றும் அந்த நாட்டின் தொழில் அதிபர்களையும் சந்திக்கிறார். கிரீஸ் நாட்டிற்கு கடைசியாக 1983ம் ஆண்டு இந்திய பிரதமராக பொறுப்பு வகித்த இந்திரா காந்தி சென்றிருந்தார். அவருக்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு மோடி சென்றுள்ளார்.


கிரீஸ் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அதிகாரிகள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மேலும் படிக்க: Supereme Court On Manipur: மணிப்பூர் பாலியல் வன்கொடுமை.. சிபிஐ வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு


மேலும் படிக்க: Uttarpradesh Accident: கால்வாயில் கவிழ்ந்த டிராக்டர்: அடித்து செல்லப்பட்ட மக்கள்...9 பேர் உயிரிழப்பு...உ.பி.யில் சோகம்!