இந்திய உளவுத்துறை அளித்த தகவலின்படி, மத உரிமைகள் சார்ந்து தவறான தகவல்களை பரப்பியதாக குற்றஞ்சாட்டி தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை மத்திய தகவல் மற்றும் தொடர்பியல் அமைச்சகம் நீக்கியுள்ளது. 






இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டில் மக்கள் தங்களது மதங்களை பின்பற்ற உரிமை மறுக்கப்பட்டதாக கூறும் வகையில் உள்ள வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், அதோடு, அக்னிபத் திட்டம், நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதற்காக வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் ( Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules 2021) கீழ், கடந்த 23 ஆம் தேதி யூடியூப் தளத்தில் வெளியான தவறான தகவல்கள் மற்றும் உண்மைக்கு புறம்பாக உருவாக்கப்பட்ட வீடியோக்களை நீக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் தவறான நோக்கத்தோடு பல்வேறு மதத்தினரிடையே வெறுப்பை பரப்புவதற்காக உருவாக்கப்பட்டவைகள் இருந்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், நாட்டில் அரசு சில மதத்தினரின் மத உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதாகவும், மதத்தினை அச்சுறுத்தும் வகையில் அரசு செயல்படுவதாகவும், இந்தியாவில் போர் நடைபெறும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வீடியோக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோக்கள் ஒரு கோடியே 30 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருந்தது. வீடியோக்கள் மதவெறியைத் தூண்டி பொதுமக்களின் அமைதியினை குலைக்கும் வகையில் இருந்தது. 


மேலும், யூடியூபில் பதிவிடப்பட்ட வீடியோக்களில் அரசின் திட்டமான அக்னிபத், இந்திய இராணுவ படை உள்ளிட்டவைகள் பற்றி அவதூறுதான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. காஷ்மீர் உள்பட நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களின் கண்டென்கள் இருந்தன. இதனால் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கும் நாடுகளையும் பாதிக்கும் வகையிலும், சில வீடியோக்கள் இந்தியா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் எல்லைப்பகுதிகளை பற்றிய தவறான தகவல்களை வெளியிட்டிருந்தது. இது இந்தியாவின் இறையாண்மையை முற்றிலும் பாதிக்கும்.


இதானால், நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் 2000 ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69 ஏ-வின் கீழ் (69A of the Information Technology Act, 2000) நீக்கப்பட்டுள்ளது. 


பத்து யூடியூப் சேனல்களின் வெளியிடப்பட்ட 45 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவை சீர்குலைப்பது, பொதுமக்களின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பது ஆகிய நோக்களுடனான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளது.