தலைநகர் டெல்லியில் பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவர் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் டெல்லி பெண்கள் ஆணையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆறு நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 


கடந்த செப்டம்பர் 18 ம் தேதி சிறுவன் தங்கள் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருக்கும்போது 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு அந்த 4 பேரும் சிறுவனின் பின்பகுதியில் கட்டையை உள்செலுத்தி கொடுமை படுத்தியுள்ளனர். தொடர்ந்து, கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சிறுவனை கொடூரமாக தாக்கி சாலையில் விட்டு சென்றுள்ளனர். 


மயக்கநிலையில் கிடந்த சிறுவனை பார்த்த அக்கம்பக்கதினர் மீட்டு பெற்றோரிடம் தகவல் தெரிவித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 22 ம் தேதி கண் முழித்த சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தயாரிடம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்களைப் பாதுகாக்கும் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தலைமறைவாகியுள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்ட 4 பேரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஒரே வயதுடைய மைனர்கள் என்று தெரிவித்தனர். 






இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு இல்லை என்றால், ஆண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. 12 வயது சிறுவன் நான்கு பேரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தடியால் தாக்கப்பட்டு பாதி இறந்த நிலையில் விடப்பட்டான். எங்கள் குழு இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தது. இது மிகவும் கொடூரமான சம்பவம். சிறுவனை நான்கு பேர் கும்பல் பலாத்காரம் செய்து, அவரது அந்தரங்கப் பகுதியில் தடியை செருகி, இரக்கமின்றி அடித்து துன்புறுத்தினர்.


சிறுவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியுவில் உள்ளான். எங்கள் குழு தொடர்ந்து குடும்பத்துடன் அவர்களுக்கு உதவி செய்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று பதிவிட்டிருந்தார்.