78th Independence Day: தாயின் பெயரில் ஒரு மரக் கன்று: 15 லட்சம் மரக் கன்றுகளை நட அரசு திட்டம்
78th Independence Day: தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும் இயக்கம் சார்பில் சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

2024 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 15 லட்சம் மரக்கன்று நடும் இயக்கத்தை மேற்கொள்கிறது. மரக்கன்றுகள் நடும் இயக்கம் ( ஏக் பெட் மா கே நாம் ) தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது.
முப்படைகள், டிஆர்டிஓ, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், சைனிக் பள்ளிகள், தளவாட தொழிற்சாலைகள் போன்ற பாதுகாப்புத் துறை அமைப்புகள் மூலம் இந்த இயக்கம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த இயக்கத்தில் பங்கேற்று தமது தாயின் நினைவாக மரக்கன்றை நட்டார்.
இயற்கையைப் பாதுகாக்கும் இயக்கத்தில் மக்கள் இணைய வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை மேலும் சிறப்பாகவும், ஆற்றல் மிக்கவராகவும் மாற்றுவதில் தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.
Also Read:Video: விண்வெளியில் குட்டி ஒலிம்பிக்..! வியக்கவைத்த விண்வெளி வீரர்கள்..!