PM Modi cabinet 2.0: யார் யாருக்கு எந்தெந்த துறை? - பிரதமர் மோடி கேபினெட் 2.0 முழு விவரம்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கூடுதலாக கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜ்ஜூ சட்டத்துறை அமைச்சராகவும் தர்மேந்திர பிரதான் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

Continues below advertisement

பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவைக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கூடுதலாக கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜ்ஜூ சட்டத்துறை அமைச்சராகவும் தர்மேந்திர பிரதான் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

Continues below advertisement

மொத்தம் 15 கேபினேட் அமைச்சர்களும் 28 இணை அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.  இதில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமானப்போக்குவரத்துத்துறை, அஸ்வினி வைஷ்ணவுக்கு ரயில்வே துறை, ஹர்தீப் சிங்குக்கு பெட்ரோலியம் ஊரகவளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை, பியூஷ் கோயலுக்கு ஜவுளித்துறை, மன்சுக் மாண்டவியாவுக்கு சுகாதாரத்துறை ஸ்மிருதி இராணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, வீரேந்திர குமாருக்கு சமூகநீதித்துறை, சர்பானந்த் சோனேவாலுக்கு ஆயுஷ், பூபேந்திர யாதவுக்கு சுற்றுச்சூழல்துறை,அனுராக் தாக்கூருக்கு தகவல் ஒலிபரப்புத்துறை , கிஷண் ரெட்டிக்கு வடக்குப்பிராந்திய வளர்ச்சி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் எல்.முருகன் தகவல் தொழில்நுட்பம், மீன்வளத்துறை, பால்வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் 43 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றார்கள். புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. மகாராஷ்டிராவின் நாராயண் தாட்டு ரானே முதலாவதாகப் பதவியேற்றார்.அசாமிலிருந்து 2 முறை எம்.பி.யாகத் தேர்வான சர்பானந்த சோனாவால் அமைச்சராகப் பதவியேற்றார். இவர் மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர். மத்தியபிரதேசத்திலிருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்குத் தேர்வான ஜோதிராத்திய சிந்தியா பாஜக அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். 50 வயதான சிந்தியா முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராவார். 
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பீகாரின் ராம் பிரசாத் சிங் மற்றும்  ஒடிசாவின் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ விரிவாக்கம் செய்யப்படும் புதிய அமைச்சரவையிலும் அமைச்சராகப் பதவியேற்றார்.

பாஜக அரசு முந்தைய அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவ்யா,வேளாண் துறை இணை அமைச்சராக இருந்த பர்ஷோத்தம் ரூபாலா மற்றும்  
வீட்டு வசதித் துறை இணை அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இந்த விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் பொறுப்பேற்றனர். பெரும்பாலானவர்கள் மூன்றுமுறைக்கு மேல் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும்,மத்திய அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக இருந்த கங்காபுரம் கிஷண் ரெட்டி விரிவாக்கப்பட்ட கேபினெட்டின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

நிதித்துறை இணையமைச்சராக இருந்த அனுராக் சிங் தாக்கூர் பிரதமர் மோடி கேபினேட்டின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த அனுபிரியா சிங் படேல் விரிவாக்கப்படும் மோடி அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சராகப் பதவியேற்றார்.உத்தரப்பிரதேசத்திலிருந்து 2வது முறையாக எம்.பி.யானவர். 

உ.பி.யின் பானு பிரதாப் சிங் வர்மா அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பானு பிரதாப் சிங் வர்மா வழக்கறிஞர். உத்திரபிரதேச மாநில  எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்தவர்.அந்த மாநிலத்திலிருந்து 5 முறை எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டவர். மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த அனுபிரியா சிங் படேல் விரிவாக்கப்படும் மோடி அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சராகப் பதவியேற்றார்.உத்தரப்பிரதேசத்திலிருந்து 2வது முறையாக எம்.பி.யானவர்.

குஜராத் சமூக நலவாரிய உறுப்பினராக இருந்த தர்ஷனா ஜார்தோஷ் அமைச்சராகப் பதவியேற்றார். அந்த மாநிலத்திலிருந்து 3 முறை எம்.பி.யாகத் தேர்வானவர். அடுத்து, உச்சநீதிமன்ற வழக்கறிஞர், சமூக சேவகர் மீனாட்சி லேகி அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதுடெல்லி 2வது முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  குஜராத் மாநிலத்திலிருந்து 2வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுஹான் தேவுசின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் அகில இந்திய வானொலியின் முன்னாள் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜீவ் சந்திரசேகர் , ஏ.நாராயணஸ்வாமி, ஷோபா கரண்ட்லாஜே, பகவந்த் கூபா ஆகிய  4 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

திரிபுராவின் பிரதிமா பவுமிக் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.மிக எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து அரசியலுக்கு  வந்தவர் பிரதிமா. திரிபுரா பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்.

மேற்கு வங்கத்திலிருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் சுபாஷ் சர்கார் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் மேற்கு வங்க எய்ம்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றியவர். குஜராத் மாநிலத்திலிருந்து முதன்முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்ஜபரா மகேந்திரபாய் அமைச்சராகப் பதவியேற்றார். அந்த மாநிலத்தின் எளிய மக்களுக்கு குறைந்த பணத்தில் சேவை செய்யும் 2 ரூபாய் டாக்டராக அறியப்பட்டவர். கடைசியாக தமிழ்நாட்டின் எல்.முருகன் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola