2014-ம் ஆண்டு முதல், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாடு அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கையை நோக்கிய பயணத்தைத் தொடங்கியதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
”உலகம் மதிப்புடன் பார்க்கிறது”:
2014-ம் ஆண்டுக்கு முன்பு வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்களுக்கு மதிப்புக் குறைவாக இருந்தது எனவும், இப்போது அது நேர்மாறாக உள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். உலகம் இந்தியாவை மதிப்புடனும், மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
புதுதில்லியில் நடைபெற்ற ரோட்டரி சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பல புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் இந்தியாவின் திறன்களை சிறந்த முறையில் பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
கோவிட் தடுப்பூசி:
2014-ம் ஆண்டுக்கு முன்பு, பல அமைச்சர்கள் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதாகவும், ஆனால் கடந்த 9 ஆண்டுகளில், ஒரு மத்திய அமைச்சர் கூட இதுபோன்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகவில்லை என்றும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்திய நம்பிக்கையும் உறுதியும் இந்தியர்கள் முன்னோக்கிச் செல்லவும், உலகத்தை வழிநடத்தவும் நம்பிக்கை அளித்துள்ளது.
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 94 நாடுகளுக்கு 750 லட்சம் டோஸ் கோவிட் தடுப்பூசியை இந்தியா வழங்கியுள்ளது. கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது, உலகுக்கு வழிகாட்டியாக இந்தியா விளங்கியது. விண்வெளித்துறையிலும் சிறந்த முன்னேற்றங்களை இந்தியா அடைந்து வருகிறது என மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
Also Read: ஜனநாயக கடமை மிக்க மக்கள்...கம்யூனிஸ்டுகளின் கோட்டை... திரிபுரா தேர்தல் வரலாறு.. ஒரு பார்வை...!