சி.ஏ.ஐி. அறிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சியின்போது 3 சதவிகித மாணவர்கள், அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர்.


சிஏஜி அறிக்கையில் அம்பலம்:


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர். 2016 முதல் 2021 அதிமுக ஆட்சியில் வீடுகள கட்டப்பட்டதில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 5.09 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் தரப்பட்ட நிலையில், 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டிருந்தது.


புத்தகப்பையில் இருந்த படத்தை மாற்ற 13 கோடி ரூபாய் செலவாகதும் என்பதால் அதை மாற்ற வேண்டாம் என்று கூறினார் முதலமைச்சர். அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான 60 சதவிகித வீடுகள் கட்டப்படவில்லை என்றும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற செலவுகளை செய்த அதிமுக அரசு:


அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 50 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கியுள்ளனர். 


கல்வித்துறையில் தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளதை சி.ஏ.ஜி அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் புதிதாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2016 ஆம் அண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மடிக்கணினி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் 1.75 மாணவர்களுக்கு வழங்கவில்லை. ரூ. 2.18 கோடி தேவையற்ற செலவு என அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
ஒரு நிர்வாகம் எப்படி நடைபெறக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளே எடுத்துக்காட்டு" என்றார்.


முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிஏஜி அறிக்கை குறித்து நேற்று பேசியிருந்தார். "தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதி நாளில் மத்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் (சிஏஜி) அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 2016 முதல் 2021 வரை பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நிர்வாகச் சீர்கேடுகளும், முறைகேடுகளும் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, பழனிசாமி தனது சம்பந்தி மற்றும் குடும்பத்தினருக்கு டெண்டர்களை ஒதுக்கவே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையை தன் வசம் வைத்திருந்தார். முறைகேட்டின் உச்சமாக அரசு அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த புள்ளிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


2019 முதல் 2021-ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் 57 கணினிகளை பயன்படுத்தி 87 ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் தாக்கல் செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2,091 டெண்டர்கள் ஒரே கணினியை பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.