மகாராஷ்ட்ரா மாநிலத்தின் வடக்கு நாசிக் பகுதியின் வடக்கே அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரின் 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு உடனடியாக சாலைகள் மற்றும் திறந்த வெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ பெரிய பாதிப்போ இல்லை என கூறப்படுகிறது. நிலநடுக்கம் தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் நேற்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.05 மணியளவில் பதிவான நிலநடுக்கத்தின் மையம் , கார்கிலுக்கு வடக்கே 191 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இதனிடையே, 2 தினங்களுக்கு முன்பாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 260-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.