Mukesh Ambani: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2047 ஆம் ஆண்டிற்குள் 40 ட்ரில்லியன் டாலரை எட்டும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். பொருளாதாரம் தற்போதைய அளவிலிருந்து 13 மடங்கு முன்னேற்றம் காணும்;  எரிசக்தி புரட்சி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலால் நாடு பெரும் அளவில் வளர்ச்சி அடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு  அடுத்தபடியாக உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தினை கொண்ட நாடாக உள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியினை கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மதிப்பீடு செய்துள்ளார்.


ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலில் உள்ள கௌதம் அதானி, 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.






பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி:


குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் எனர்ஜி (Pandit Deendayal Energy University) பல்கலைக்கழகத்தின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி பங்கேற்றார். 


இந்த நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, “"3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருந்து, இந்தியா 2047 ஆம் ஆண்டில் 40 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளரும். பொருளாரத்தில் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா பிடிக்கும்."  என பட்டமளிப்பு விழாவில்  அம்பானி கூறினார்.


இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, அதாவது 2047-ஆம் ஆண்டு 'அமிர்தக் கால்' ('Amrit Kaal')  ​​நாடு பொருளாதார வளர்ச்சியில் நாடு பல்வேறு மாற்றங்களை காணும். பெரிய வளர்ச்சியை எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


"வரும் காலங்களின் இந்தியாவின் அசுர வளர்ச்சிக்கு மூன்று விஷயங்கள் முக்க்கிய பங்கு வகிக்க உள்ளன. பயோ-எனர்ஜி புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி புரட்சி ஆகிய மூன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். வளர்ச்சிக்கு வித்திடும். 


அம்பானியின் ஆயில்-டு-டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், சோலார் பேனல்கள் முதல் ஹைட்ரஜன் வரை சுத்தமான ஆற்றல் மதிப்புச் சங்கிலியை உருவாக்குவதில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகிறது.


"யோ-எனர்ஜி புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி புரட்சி ஆற்றலை திறமையாக பயன்படுத்த நமக்கு உதவும்.” "இந்த மூன்று புரட்சிகளும் இணைந்து இந்தியாவும் உலகமும் நமது அழகான பூமியை காலநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவும்." என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.


மாணவர்களின் வளர்ச்சிக்கான அறிவுரை:


மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்  மூன்று மந்திரங்களை கூறினார். சிந்தனை விசாலமாக இருக்கட்டும். திங்க் கிரீன், திங்க் டிஜிட்டல்  என்ற மூன்று முக்கியமானவற்றை அவர் மாணவர்களிடம் தெரிவித்தார். 


" துணிச்சலான கனவு காண்பவராக இருங்கள். இந்த உலகில் இதுவரை நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அனைத்தும்/ பெரிய விஷயமும் ஒரு காலத்தில் சாத்தியமற்றது என்று நினைத்த கனவாக இருந்தது உங்களால் முடியாததை சாத்தியமாக்க முடியும்,'' என்றார்.


இயற்கை அன்னையை உணர்ந்து, அதன் ஆற்றலுக்கு தீங்கு விளைவிக்காமல் அதன் ஆற்றலைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்து அதன் வழியில் நடக்குமாறு மாணவர்களை அவர் கேட்டார். 'திங்க் கிரீன்' என்பது "எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்விடத்தை/ பூமியை விட்டுச் செல்கிறோம்" என்பதை உறுதி செய்வதாகும், என்றார்.


இந்தியாவின் வளர்ச்சியில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கை வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) போன்ற தொழில்நுட்பங்கள் மாற்றத்திற்கு சக்தி வாய்ந்தவையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவற்றை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துங்கள் என மாணவர்களிடம் கூறினார்.


"இந்த மூன்று மந்திரங்கள் உலகளவில் இந்தியாவை ’clean energy leader’ மாற்றும் பணியில் உங்களை பங்கெடுத்து கொள்ள உதவும்  என்று அவர் கூறினார்.


அம்பானி மேலும் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காலகட்டம், விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்பித்தது, சிறந்த தொழில் வல்லுநர்களை உருவாக்கியது மற்றும் மக்களை வலுப்படுத்தியது. "எந்த மலையும் ஏற முடியாத அளவுக்கு உயரமாக இருக்காது; எந்த நதியும் கடக்க முடியாத அளவுக்கு பெரியதாக இருக்காது. எனவே உங்கள் உறுதியுடன் முன்னேறுங்கள்," என்று அவர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.


பண்டிட் தீன்தயாள் எனர்ஜி யுனிவர்சிட்டி (PDEU) குஜராத்தில் உள்ள முதல் மற்றும் ஒரே தனியார் பல்கலைக்கழகம் ஆகும், இது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) வழங்கிய 'A++' உயர் தரம் கொண்டது.


முகேஷ் அம்பானி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் ( Board of Governors of the university.) தலைவராக உள்ளார்.


அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில் பயிற்சி பெற்ற மனித வளங்களின் தேவையை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை பல்கலைக்கழகம் வழங்குகிறது.


தற்போது, ​​6,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆர்வமுள்ள துறைகளில் படிப்புகளை பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.