இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. குடிசைப்பகுதியின் மேல் விமானம் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட  தீவிபத்தினால் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.


இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் எப்போதும் பயிற்சியை மேற்கொண்டாலும் விபத்துக்களைத் தான் சந்தித்து வருகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விபத்தில் மூத்த விமானப்படை அதிகாரி உயிரிழ்ந்தார். அதனையடுத்து பஞ்சாப் மாநிலம் யோகா மாவட்டத்தில் மிக்  21 ரக போர் விமானத்தில் இரு விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இதனால் அபினவ் சவுத்ரி என்ற விமானி உயிரிழந்தார். மேலும் கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தானில் சுரக்கர் விமான தளத்தில் இருந்து சென்ற விமானமும் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்களையெல்லாம் விசாரிப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை அதிகாரிகளும் இந்த விபத்துக்களுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வரும் நிலையில் தான் 4 வது முறையாக மிக்- 21 ரக போர் விமானம் ராஜஸ்தானில் மக்கள் வசிக்கும் பகுதியில் வெடித்து சிதறியுள்ளது.




  • இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானத்தில் வீரர்கள் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் இருந்தனர். ஆனால் தீடிரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைச்சரி செய்வதற்கு விமானி பல முறை முயற்சித்தப்போதும் எந்த பலனும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விமானத்திலிருந்து பாதுகாப்பாக உயிர்தப்பிய நிலையில்,  விமானம் பார்மாருக்கு அருகில் உள்ள மடாசர் கிராமத்தில் உள்ள குடிசைப்பகுதியின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இதோடு குடிசைப்பகுதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்ததது.


 






இதனையடுத்து தகவலறிந்து ஹெலிகாப்டர் மூலம் விரைந்த மீட்புப்படையினர் தீயினை அணைக்க முயற்சித்தனர். அதோடு கிராமத்து மக்களும் குடிசைப்பகுதியில் பற்றி எரிந்த தீயிணை அங்கிருந்த தண்ணீரைக்கொண்டு அணைத்தனர். இந்த போர் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி உள்பட கிராம மக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இவ்விபத்திற்கானக் காரணத்தை அறிவதற்கு நீதிமன்ற விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இதோடு இந்த விபத்து  காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பூர்த்தியா கிராமத்திற்கு அருகே நிகழ்ந்ததாக போலீஸ் சூப்பிரண்டு பார்மர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.