மணமகளே மணமகளே வா வா.. இனி இல்லை: வா... வந்து வண்டில ஏறு... மணமகனை காரில் அழைத்துச் சென்ற மணமகள்!

மணமகனுக்கு ஒரே ஷாக்... ‛என்ன என்று கேட்கிறார்...’ வாங்க கூட்டிட்டு போறேன்... என அலங்கரிக்கப்பட்ட அந்த ஜீப்பில் அசலாட்டாக அமர்ந்து, தன் கணவரை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அந்த மணப்பெண்.

Continues below advertisement

‛கல்யாணத்தன்று என் மனைவி தலை குணிந்ததை பார்த்தது... அதுக்கு அப்புறம் நான் தான் தலை குணியுறேன்..’ என, கணவன்கள் கிண்டலாக பேசுவதுண்டு. காரணம், மணமகள் கோலத்தில் வெட்கம் பூரிப்பு என வேறுவிதமான தோற்றத்தில் மணமகள் இருப்பார். புதிய இடத்திற்கு செல்வதால் ஒருவிதமான பயமும், ஆர்வமும், பிரிவு என்பதால் கொஞ்சம் சோகமும் கூட சில மணமகள்கள் முகத்தில் பார்க்கலாம். இன்றும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில், ‛மணமகளே... மணமகளே வா வா...’ என்ற பாடலை ஒலிக்கச் செய்து, மணமகன் மணமகளை வீட்டிற்கு அழைத்து வரும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் ‛தார்’ வாகனத்தில் தாறுமாறாக மணமகனை ஏற்றிக்கொண்டு மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார் மணமகள் ஒருவர். 

Continues below advertisement


ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த திருமணம் ஒன்றில் தான் இந்த கலகலப்பான நிகழ்வு நடந்துள்ளது. வடக்கில் பொதுவாகவே நல்ல அலங்காரமும், கோலாகலமுமாய் தான் திருமணங்கள் நடக்கும். அந்த திருமணத்திலும் மணமகள், அவர்களின் பாரம்பரிய மணமகள் உடையை அணிந்திருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு அவர்கள் செல்ல வெளியே ‛தார்’ ஜீப் நிற்கிறது. இப்போது டிரைவர் சீட்டில் அமர்கிறார் மணமகள். மணமகனுக்கு ஒரே ஷாக்... ‛என்ன என்று கேட்கிறார்...’ வாங்க கூட்டிட்டு போறேன்... என அலங்கரிக்கப்பட்ட அந்த ஜீப்பில் அசலாட்டாக அமர்ந்து, தன் கணவரை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அந்த மணப்பெண்.


அங்கு அவர்களை வரவேற்க காத்திருந்தவர்களுக்கு காரில் வந்திறங்கிய அவர்கள் இருவரையும் பார்த்து ஒரே ஆச்சர்யம். ஆனால் மணமகள் அது எதையும் பொருட்படுத்தாமல், கணவருடன் புதிய வாழ்க்கையை தொடங்கும் உற்சாக மூடிற்கு வந்துவிட்டார். அப்புறம் என்ன ஆட்டம் ,பாட்டம் என மாமியார் வீட்டு நிகழ்வுகளை முடித்த கையோடு, அந்த வீடியோ வெளியே வர, இப்போது சமூக வலைதளத்தில் எங்கு பார்த்தாலும் அவர்களின் வீடியோக்கள் தான். வைரலான அந்த வீடியோவை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

 

அதே நேரத்தில் காஷ்மீர் பழமைவாதிகள் சிலர், இந்த செயலை விரும்பவில்லை என்றும், அதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola