* சிறையில் சொகுசு வசதி பெற்ற வழக்கு தொடர்பாக சசிகலாகவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


* அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்கிறார்.


* கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கேரளாவில் 2 நாட்களாக பாதிப்பு அதிகரித்துள்ளது.


* சென்னை வண்ணாரப்பேட்டையில் மண் சரிவில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.


* இந்தியாவிற்கு வரும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இ-விசா கட்டாயம் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


* மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதம் 12%இல் இருந்து 3% ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


* செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


* நாட்டின் பொதுத்துறை சொத்துக்களை பிரதமர் விற்றுவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ரூ. 6 லட்சம் கோடி சொத்து உருவாக்கம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருப்பது குறித்து ராகுல்காந்தி விமர்சித்து பேசியுள்ளார்.



* தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வரியை குறைக்க ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சரவையின் முடிவுக்கு அவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த 3 சதவீத வரி குறைப்பின் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 குறையும். தற்போது, புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.52க்கும், காரைக்காலில் பெட்ரோல் ஒரு லிட்டர்  ரூ.99.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பால் புதுச்சேரி வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


* தமிழ்நாட்டில் நேற்று ஆயிரத்து 573 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  தமிழ்நாட்டில் 1,572, வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,573 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 170  நபர்களுக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 


* இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற