உலகம் முழுவதும் பெரும்பாலான துறைகளில் இணையதளத்தின் வளர்ச்சி முக்கிய பங்காற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது. இவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பட ஏராளமான மென்பொருட்களை தயாரித்து வருகின்றனர்.


கிளவுட் சாப்ட்வேர்:


அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான மென்பொருள்களில் ஒன்று கிளவுட். சாப்ட்வேர் மற்றும் விமான சேவை துறைகளில் கிளவுடின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இந்த சூழலில், அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிளவுட் மென்பொருள் பாதிக்கப்பட்டது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.


குறிப்பாக, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கிளவுட் மென்பொருள் சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. போர்டிங் பாஸ் வழங்குவதில் கிளவுட் மென்பொருள் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால், பல விமானங்களின் சேவைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களான இந்தியன் ஏர்லைன்ஸ், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.


விமான சேவை, மென்பொருள் சேவை பாதிப்பு:


விமான சேவை மட்டுமின்றி மென்பொருள் நிறுவனங்களிலும் இதன் பாதிப்பு மிக மோசமாக ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதரபாத், கொல்கத்தா, டெல்லி மற்றும் நாக்பூரில் இதன் தாக்கம் அதிகளவில் விமான சேவையிலும், மென்பொருள் நிறுவனங்களிலும் காணப்பட்டது.


இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் விமான சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டது. ப்ரன்ட்டியர் ஏர்லைன்ஸ், ஏலிஜெயண்ட் ஏர், சன் கன்ட்ரி ஏர்லைன்ஸ் நிறுவனங்களிலும் இதனால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பெரிய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஆகாசா மற்றும் ஸ்பைஸ்ஜெட்டிலும் கிளவுட் மென்பொருள் முடங்கியதால் செக் – இன் முறை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பல விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கைகளிலே எழுதப்பட்டு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முக்கிய விமான நிலையங்களான பெங்களூர், மும்பை மற்றும் டெல்லியில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விமான சேவையும், சாப்ட்வேர் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க: 'கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார்: அமெரிக்காவின் அனைத்து மக்களுக்கும் அதிபராய் இருப்பேன்'- ட்ரம்ப் உருக்கம்!


மேலும் படிக்க: இம்ரான் கானுக்கு அடுத்த அடி.. முற்றிலுமாக ஒழித்துக்கட்ட ஆளும் அரசின் பகீர் திட்டம்!